முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

200 தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில் உழைக்க வேண்டும்: 3 மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 24 ஜூன் 2025      தமிழகம்
CM 2024 08 16

Source: provided

சென்னை : ஆண்டிபட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், சோழவந்தான் சட்டப்பேரவைத் தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர்  மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்பொழுது 200 தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில் உழைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், ஆளும் தி.மு.க., தேர்தலுக்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ‘உடன்பிறப்பே வா’ என்ற பெயரில், தொகுதிவாரியாக நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்வை முதல்வர்  மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி, நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆண்டிபட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து கருத்துகளைக் கேட்டறிந்தார். அப்போது, தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகள் குறித்து முதல்வர்  கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது.

உழைப்பவர்களுக்கு அதற்கேற்ற அதிகாரம் கட்சியில் நிச்சயம் கிடைக்கும் என உறுதி அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கட்சிப் பொறுப்புகளில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் 200 தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில் உழைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுறுத்தல்களையும் முதல்வர்  வழங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து