முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பலவீனங்களை வெற்றிகளாக மாற்றும் போது நன்றாக இருக்கிறது: கவாஸ்கர்

செவ்வாய்க்கிழமை, 24 ஜூன் 2025      விளையாட்டு
Gavaskar 2023 06 09

Source: provided

லீட்ஸ் : பலவீனங்களை சரி செய்து மீண்டும் வெற்றிகளாக மாற்றும்போது அது மிகவும் நன்றாக இருக்கிறது என்று ரிஷப் பண்டை கவாஸ்கர் பாராட்டினார்.

முதல் டெஸ்ட்... 

 இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்றது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. தொடர்ந்து 6 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 96 ஓவர் முடிவில் 364 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் (118) மற்றும் கேஎல் ராகுல் (137) இருவரும் சதமடித்து அசத்தினர். இதனையடுத்து, 371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து விளையாடியது.

ரிஷப் பண்ட் 2 சதம்...

இப்போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து ரிஷப் பண்ட் அசத்தினார். இதன் மூலம் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த இந்தியாவின் முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை அவர் படைத்தார். மேலும், இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த 7-வது இந்திய வீரர் ரிஷப்பண்ட் ஆவார்.

அற்புதமான ஆட்டம்...

இந்த நிலையில் ரிஷப்பண்ட் ஆட்டத்தை முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான கவாஸ்கர் பாராட்டியுள்ளார். அவர் சூப்பர், சூப்பர், சூப்பர் என்று 3 முறை கூறி புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது, 'ரிஷப்பண்டின் ஆட்டம் மிக அற்புதமாக இருந்தது. இளம் வீரரான அவரது ஆட்டம் முற்றிலும் அருமையாக இருந்தது' என்றார்.

பாராட்டு...

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய பயணத்தில் மெல்போர்ன் டெஸ்டில் ரிஷப்பண்டின் மோசமான ஷாட்டை கவாஸ்கர் முட்டாள், முட்டாள், முட்டாள் என்று 3 முறை கூறி கடுமையாக விமர்சித்து இருந்தார். தற்போது அவரை கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.

கடினமான செயல்முறை...

இது தொடர்பாக ரிஷப்பண்ட் கூறும்போது, 'பலவீனங்களை சரி செய்து மீண்டும் வெற்றிகளாக மாற்றும்போது அது மிகவும் நன்றாக இருக்கிறது. இது கடினமான செயல்முறையாகும். எனது பலவீனங்களை கடந்தது அதிர்ஷ்டமே. கடின உழைப்பு, கவனம், ஒழுக்கம் ஆகியவை இதில் சம்மந்தப்பட்டுள்ளன' என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து