முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக 5 சதங்களை பதிவு செய்து இந்தியா

செவ்வாய்க்கிழமை, 24 ஜூன் 2025      விளையாட்டு
India 2024-05-11

Source: provided

லீட்ஸ் : டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக 5 சதங்களை பதிவு செய்து இந்தியா அசத்தியுள்ளது. 

 முதல் டெஸ்ட்... 

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்றது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. தொடர்ந்து 6 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 96 ஓவர் முடிவில் 364 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் (118) மற்றும் கேஎல் ராகுல் (137) இருவரும் சதமடித்து அசத்தினர். குறிப்பாக பண்ட் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து அசத்தினார். இதனையடுத்து, 371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து விளையாடியது.

5 சதங்கள்... 

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஜெய்ஸ்வால், கில், கே.எல்.ராகுல், பண்ட் (2) ஆகியோர் சதம் விளாசியுள்ளனர். இதன்மூலம் ஒரு டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக 5 சதங்களை பதிவு செய்து இந்தியா அசத்தியுள்ளது. இதற்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த சாதனை 6 முறை மட்டுமே நிகழ்த்தப்பட்டுள்ளது. 

ஒரே டெஸ்டில்... 

அதே சமயம் மற்றொரு நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அணி ஒரே டெஸ்டில் 5 சதங்கள் அடித்தது 1 முறை மட்டுமே நடந்துள்ளது. 1955 இல் நடைபெற்ற புகழ்பெற்ற ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் ஆஸ்திரேலியா ஒரே இன்னிங்சில் 5 சதங்கள் விளாசியது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து