Idhayam Matrimony

ஓராண்டில் 17,702 பேர் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. தகவல்

வெள்ளிக்கிழமை, 4 ஜூலை 2025      தமிழகம்
TNPSC 2022 12 20

Source: provided

சென்னை : டி.என்.பி.எஸ்.சி. மூலம் கடந்த ஓராண்டில் 17,702 பேர் பல்வேறு அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு ‘ 2026 ஜனவரிக்குள் டி.என்.பி.எஸ்.சி. வாயிலாக 17,595 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என கடந்த 2024-ம் ஆண்டு சட்டப்பேரவையில் அரசு அறிவித்திருந்தது.

தேர்வர்களின் நலன் கருதி டி.என்.பி.எஸ்.சி., தேர்வு பணிகளை துரிதப்படுத்தி 2024 ஜூன் முதல் 2025 ஜூன் வரை பல்வேறு அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு 17,702 பேரை தேர்வு செய்துள்ளது. தமிழக அரசு 2026 ஜனவரி வரை நிர்ணயித்த இலக்கை டி.என்.பி.எஸ்.சி. 7 மாதங்களுக்கு முன்பாகவே எட்டியுள்ளது. மேலும் பல்வேறு தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு 2500-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

குருப்6-ஏ தேர்வு: குருப்6-ஏ பணிககளில் அடங்கிய தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் (சட்டம்-நிதித்துறை நீங்கலாக) பதவிகளை நிரப்புவதற்கான கணினிவழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (டிப்ளமா, ஐ.டி.ஐ. கல்வித்தகுதி கொண்ட பதவிகள்) பதவிகளை (திட்ட உதவியாளர், இளநிலை வரைதொழில் அலுவலர், தொழில்நுட்ப உதவியாளர் ) நிரப்புவதற்கான 3-வது கட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஜூலை 9 மற்றும் 10-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு அழைக்கப்பட்டுள்ள தேர்வர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது’ என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து