முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை குண்டுவெடிப்பு வழக்கு: 28 ஆண்டுகளுக்கு பிறகு தேடப்பட்ட நபர் கைது

வியாழக்கிழமை, 10 ஜூலை 2025      தமிழகம்
Jail

கோவை, கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 28 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவர், கர்நாடகா மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.

கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. 12-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த இந்த வெடிகுண்டு சம்பவத்தை, தடை செய்யப்பட்ட அல் - உம்மா பயங்கரவாத அமைப்பினர் அரங்கேற்றினர். இந்த தாக்குதல் சம்பவத்தில் 58 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய கோவை மாநகர காவல் துறையினர் வழக்கு பதிந்து ஏராளமானோரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் தொடர்புடைய பலர், தற்போதும் கோவை மத்திய சிறையில் உயர் பாதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்தவர் சாதிக் என்ற ராஜா என்ற டெய்லர் ராஜா. சுமார் 28 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து வந்தார்.

 இந்த நிலையில் எஸ்.பி.பத்ரி நாராயணன் தலைமையிலான கோவை மேற்கு மண்டல தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் பல்வேறு தகவலின் அடிப்படையில் டெய்லர் ராஜா, கர்நாடகா மாநிலத்தில் தலைமறைவாக இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து தனிப்படை போலீஸார் கர்நாடகா மாநிலத்துக்குச் சென்று அங்கு தலைமறைவாக இருந்த டெய்லர் ராஜாவை கைது செய்தனர். அதைத் தொடர்ந்து அவரை கோவைக்கு அழைத்து வந்தனர். கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து