முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாசன வேளாண்மை திட்டத்திற்கு ரூ.305 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு

வெள்ளிக்கிழமை, 11 ஜூலை 2025      தமிழகம்
CM-5-2025-07-11

சென்னை, பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்திற்கு கூடுதலாக ரூ.305 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- நீர்வளத்துறையின் கீழ் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் 47 துணை வடிநிலங்களில் 4.69 லட்சம் ஹெக்டேர் பாசன பரப்பு பயன்பெறும் வகையில், ரூ.2 ஆயிரத்து 962 கோடியில் உலக வங்கி நிதியுதவியுடன் கடந்த 2018-ம் ஆண்டு முதல் செயலாக்கத்தில் உள்ளது. ரூ.30,267.85 கோடி திருத்திய மதிப்பீட்டில், வருகிற டிசம்பர் 2-ந்தேதி வரை திட்டகாலத்தை நீட்டித்து செயல்படுத்துவதற்கு திருத்திய நிர்வாக அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இந்த மூலம் தேர்வு செய்யப்பட்ட துணை வடிநிலங்களில் பாசன விவசாயத்தின் உற்பத்தித்திறன், காலநிலை மாற்ற தாக்கத்தை தாங்கும் சக்தி, நீர் மேலாண்மை மேம்படுத்தப்படுகிறது. இதனால் சந்தை வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இத்திட்டத்தை நீர்வளத்துறை, தொடர்புடைய துறைகளான வேளாண்மை-உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, கால்நடைத்துறை, மீன்வளம்-மீனவர் நலத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை ஆகிய 6 துறைகள் மற்றும் தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம், வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து