எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இந்திய அணி சமீபத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் தொடர் சமனில் முடிந்தது. மேலும் இத்தொடரின் கடைசி போட்டியில் முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருதையும், இந்தியாவின் சுப்மன் கில் மற்றும் இங்கிலாந்தின் ஹாரி புரூக் ஆகியோர் தொடர் நாயகன் விருதுகளையும் வென்றனர். இந்த தொடரில் முகமது சிராஜ் 23 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இந்நிலையில் இந்த தொடருக்கு பிறகு இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜை பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் வசிம் அக்ரம் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- கடைசி நாளில் நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன். அது நம்ப முடியாத முயற்சி. 186 ஓவர்கள் பந்து வீசிய பிறகும், கடைசி நாளில் இவ்வளவு கோபத்தை வெளிப்படுத்துவது சிராஜின் உற்சாகம் மற்றும் ஆர்வத்தின் அறிகுறியாகும் என்று பாராட்டியுள்ளார்.
_______________________________________________________________________________________________________
நியூசிலாந்து வீராங்கனை ஓய்வு
நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான தாம்சின் நியூட்டன் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். நியூசிலாந்து அணிக்காக கடந்த 2015-ம் ஆண்டு அறிமுகம் ஆன அவர் தனது கிரிக்கெட் கெரியர் முடிவடைவதாக அறிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்காக 10 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள நியூட்டன் அதில் 56 ரன்களும் 11 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். மறுபுறம் 15 டி20 போட்டிகளில் விளையாடி 22 ரன்களும் 9 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். நியூசிலாந்து அணிக்காக கடைசியா 2021-ம் ஆண்டு விளையாடிய அவருக்கு அதன்பின் அணியில் இடம் கிடைக்கவில்லை. இத்தகைய சூழலில் அவர் தனது ஓய்வு முடிவை இன்று அறிவித்துள்ளார்.
_______________________________________________________________________________________________________
சிராஜ் வீட்டில் கோலி ஜெர்சி
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முழுவதுமே 185 ஓவர்களை வீசி 23 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் நல்ல நிலைக்கு காரணமாக திகழ்ந்தார். இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய சிராஜ்-க்கு விராட் கோலி பாராட்டுகளை தெரிவித்தார். சிராஜ்- விராட் கோலி சகோதர்கள் போன்று பழகி வருகிறார்கள். கடந்து 2018-ம் ஆண்டு சிராஜுக்கு மோசமான ஐ.பி.எல். தொடராக இருந்தது.x அதன்பிறகு சிராஜின் திறனை கவனித்த விராட் கோலி அவரை ஆதரித்து ஆர்.சி.பி அணியில் வாய்ப்பு வழங்கியதோடு இந்திய அணிக்கும் கொண்டு வந்தார்.
எனவே முகமது சிராஜ்-க்கு எப்போதுமே விராட் கோலி மூத்த சகோதரர் போன்றவர். அவரிடம் இருந்து பெற்ற ஆலோசனை களை தான் சிராஜ் கையாள்கிறார். விராட் கோலியிடம் இருந்து அவர் கோபம் மற்றும் வெற்றிக்கான வெறி ஆகியவற்றை மட்டும் கற்றுக் கொள்ளவில்லை. உடற்தகுதியில் எவ்வாறு இருக்க வேண்டும்? என்பது குறித்த பிட்னஸ் ஆலோசனைகளையும் விராட் கோலியிடம் இருந்து தான் பெற்றுக்கொண்டார். இந்நிலையில் விராட் கோலி கையொப்பமிட்ட அவரது ஜெர்சியை சிராஜ் தனது வீட்டின் சுவற்றில் பிரேம் செய்து மாட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஜெர்சி 2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபியின் போது சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலியின் கடைசி டெஸ்ட் போட்டியை நினைவுகூரும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
_______________________________________________________________________________________________________
சி.எஸ்.கே. அணியில்...? சஞ்சு பதில்
ஐ.பி.எல். தொடரில் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வருகிறார். இதுவரை, 306 டி20 போட்டிகளில் விளையாடி 7,629 ரன்கள் குவித்துள்ளார். கடந்த சீசனில் காயம் காரணமாக பல போட்டிகளில் பேட்டிங் மட்டுமே செய்தார். சமீபத்தில் இவர் சி.எஸ்.கே. அணியில் இணைவதாக சமூக வலைதளங்களில் பேச்சு அதிகரித்தது. தோனிக்கும் முட்டி வலி, வயது காரணமாக அடுத்த சீசனில் விளையாடுவாரா எனத் தெரியவில்லை.
இந்நிலையில், அஸ்வின் தனது யூடியூப் நேர்காணலில் சஞ்சு சாம்சனிடன், “நான் கேரளாவுக்கு வந்துவிடுகிறேன். நீ தமிழ்நாட்டுக்கு மாறிவிடுகிறாயா?” எனக் கேட்டார். நீண்ட நேரம் சிரித்துக்கொண்டே இருந்த சாம்சன் , “அண்ணா, அதெல்லாம் என் கையில் இல்லை. நடந்தால் பார்ப்போம்” எனக் கூறிவிட்டார். டிசம்பரில் ஐ.பி.எல். மினி ஏலம் நடைபெறுவதால் அதில் சாம்சனை சி.எஸ்.கே. அணி வாங்க வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
_______________________________________________________________________________________________________
பும்ராவுக்கு பயிற்சியாளர் ஆதரவு
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ‘ஆண்டர்சன்-தெண்டுல்கர்’ கோப்பைக்கான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்த தொடரில் இந்திய அணியின் நம்பர் 1 வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா பணிச்சுமையை கருத்தில் கொண்டு 3 போட்டிகளில் மட்டுமே ஆடினார். இப்படி பும்ரா இந்தத் தொடர் முழுவதும் விளையாடாமல் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடியது அவருக்கு எதிராக விமர்சனத்தை எழுப்பியுள்ளது.
இந்நிலையில் பும்ராவின் உடற்தகுதி தெரியாமல் யாரும் இப்படி பேசக்கூடாது என்று இந்திய முன்னாள் பயிற்சியாளர் பரத் அருண் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் கூறுகையில், “பும்ராவுக்கு எதிராக இதுபோன்ற விஷயங்களைப் பற்றி கேள்விப்படுவது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவருக்கு முதுகில் ஒரு பெரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது, மேலும் அறுவை சிகிச்சை முடிந்து அவர் நலமாக இருக்கிறார் என்பது போல் இல்லை. மக்கள் அதனை புரிந்து கொள்ள வேண்டும். அவருடைய உடல் எதற்கு ஒத்துழைக்கிறதோ அதற்கு ஏற்றார்போல்தான் செயல்படுகிறார். எனவே அவரது உடற்தகுதியையும், காயத்தையும் குறித்து தெரியாமல் யாரும் இப்படி பேசக்கூடாது என்று கூறினார்.
_______________________________________________________________________________________________________
இந்திய மகளிர் அணி தகுதி
ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் (20 வயதுக்குட்பட்டோர்) கால்பந்து தொடர் அடுத்த ஆண்டு தாய்லாந்தில் நடைபெற உள்ளது. இதற்கான தகுதிச்சுற்று மியான்மரில் நடக்கிறது. இதில் இந்திய மகளிர் அணி 'டி' பிரிவில், மியான்மர், இந்தோனேஷியா, துர்க்மெனிஸ்தானுடன் இடம் பெற்றிருந்தது. இதில், இந்தியா தனது முதல் ஆட்டத்தில் இந்தோனேஷியாவுக்கு எதிராக சமனும் (0-0), 2-வது போட்டியில் துர்க்மெனிஸ்தானுக்கு எதிராக அபார வெற்றியும் (7-0) பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது.
இந்த சூழலில் இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் மியான்மருடன் நேற்று விளையாடியது. இதில் வெற்றி பெற்றால் ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில் விளையாடிய இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் கோல் அடித்தது. அதன்பின் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதன் மூலம் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் மியான்மரை வீழ்த்தி ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெற்று அசத்தியது. இந்தியா தரப்பில் பூஜா வெற்றிக்குரிய அந்த கோலை அடித்தார். இந்திய அணி கடைசியாக கடந்த 2006-ம் ஆண்டு ஜூனியர் (19 வயதுக்குட்பட்டோர்) ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் விளையாடி இருந்தது. அதன் பிறகு 20 வருடங்கள் கழித்து தற்போதுதான் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
_______________________________________________________________________________________________________
சிராஜுக்கு ராக்கி கட்டிய நடிகை
நாடு முழுக்க ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் நடைபெற்று வரும் நிலையில், இந்திய கிரிகெக்ட் வீரர் முகமது சிராஜுக்கு பிரபல பாடகி ஆஷா போஸ்லேவின் பேத்தி ஜனாய் போஸ்லே ராக்கி கயிறு கட்டி விட்ட வீடியோ இணையத்தில் வைரலானது.
ஜனாய் போஸ்லே ஜனவரி மாதம் 16ம் தேதி அவர் தனது 23வது பிறந்தநாளை கொண்டாடினார். அந்த கொண்டாட்டத்தில் சிராஜ் கலந்து கொண்டது இணையத்தில் பேசுபொருளானது. ஒருவரும் காதலிக்கிறார்கள் என்று கிசுகிசு பரவியது. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜனாய் போஸ்லே முகமது சிராஜுக்கு ராக்கி கயிறு கட்டி விட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
ரஷ்ய அதிபர் புதினை தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரைவில் இந்தியா வருகை
08 Dec 2025புதுடெல்லி, ஜனவரி மாதம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்தியா வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-12-2025
08 Dec 2025 -
தமிழகத்தில் டிச.14 வரை மழைக்கு வாய்ப்பு
08 Dec 2025சென்னை, தமிழகத்தில் டிசம்பர் 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சட்டசபை தேர்தலில் தி.மு.க.வின் வாக்குகள் 2.50 கோடியை தாண்டும்: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
08 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் மக்கள் துணையுடன் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும் என்றும் வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.வின் வாக்குகள் 2.50 கோடியை தாண்டும் என்றும் மாவட்ட செயலாள
-
பல்கலை., பட்டமளிப்பு விழா: கவர்னரை அவமதிப்பது ஏற்புடையதல்ல: ஐகோர்ட்
08 Dec 2025மதுரை, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.,பட்டமளிப்பு விழாவில் கவர்னரை அவமதிப்பது ஏற்புடையதல்ல என்று ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது.
-
தி.மு.க. ஊழல்: கம்பி எண்ணப்போவது உறுதி - எடப்பாடி பழனிசாமி பரபரப்பு
08 Dec 2025சென்னை, தி.மு.க. ஊழல் கூறித்து கம்பி எண்ணப்போவது உறுதி என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
கரூர் நெரிசல் சம்பவம் குறித்து த.வெ.க. சேலம் கிழக்கு மாவட்ட செயலாளரிடம் சி.பி.ஐ. விசாரணை
08 Dec 2025கரூர், கரூர் சம்பவத்தை தொடர்ந்து சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
-
வனவிலங்கு இடமாற்றம்: வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க நிபுணர் குழு அமைத்த அரசு
08 Dec 2025சென்னை, யானைகளை இடமாற்றம் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க தமிழக அரசு சார்பில் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
-
முதல்வர் சார்தான் உதவி பன்னணும்: கேரம் சாம்பியன் கீர்த்தனாவின் தாயார் கோரிக்கை
08 Dec 2025சென்னை, உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் கீர்த்தனா 3 தங்க பதக்கங்கள் வென்று சாதனை படைத்தார்.
-
இந்து விரோத அரசியலுக்கு விரைவில் முடிவு கட்டப்படும்: வானதி சீனிவாசன்
08 Dec 2025சென்னை, தி.மு.க.வின் அரசியலுக்கு முடிவு கட்டப்படும் என்று வானதி சீனிவாசன் கூறினார்.
-
கள்ளக்குறிச்சியில் பெற்றோரை இழந்து தவித்த குழந்தைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உதவி
08 Dec 2025சென்னை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெற்றோரை இழந்துவாடும் நான்கு குழந்தைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
-
வந்தே மாதரத்தின் பெருமையை பறைசாற்றும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது: பிரதமர் மோடி
08 Dec 2025புதுடெல்லி, வருங்கால சந்ததிகளுக்கு வந்தே மாதரம் வழிகாட்டியாக இருக்கும்.
-
புதுச்சேரி இன்று நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் த.வெ.க.தலைவர் விஜய் பேசுகிறார்: 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி
08 Dec 2025புதுச்சேரி, புதுச்சேரியில் இன்று நடைபெறவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பேசுகிறார்.
-
புதுச்சேரி த.வெ.க. பொதுக்கூட்டம்: தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதியில்லை - என்.ஆனந்த்
08 Dec 2025புதுச்சேரி, புதுச்சேரியில் பொதுக்கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த த.வெ.க. தொண்டர்களுக்கு அனுமதியில்லை என்று பொதுசெயலாளர் ஆனந்த் தெரிவித்தார்.
-
23 சட்டமன்ற தொகுதிகளில் முதல்வர் சிறு விளையாட்டு அரங்கம்: மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
08 Dec 2025சென்னை, 69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 23 சட்டமன்ற தொகுதிகளில் முதல்வர் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
பாலியல் வழக்கு திரைத்துறை வளர்ச்சியை அழித்துவிட்டது: விடுதலைக்கு பிறகு நடிகர் திலீப் பேட்டி
08 Dec 2025திருவனந்தபுரம், என் மீதான பாலியல் வழக்கு என் திரைத்துறை வளர்ச்சியை அழித்துவிட்டது என நடிகர் திலீப் வேதனை தெரிவித்துள்ளார்.
-
நடிகை பாலியல் வழக்கு: பிரபல மலையாள பட நடிகர் திலீப் விடுவிப்பு: எர்ணாகுளம் கோர்ட் உத்தரவு
08 Dec 2025எர்ணாகுளம், நடிகை பாலியல் வழக்கில் நடிகர் திலீப் மீதான குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரம் இல்லை என்று எர்ணாகுளம் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
-
இண்டிகோ குளறுபடிகள் குறித்து பார்லி. மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் விளக்கம்
08 Dec 2025புதுடெல்லி, திட்டமிடலில் ஏற்பட்ட தவறுகளே இண்டிகோ விமான நிறுவனத்தின் குளறுபடிக்கு காரணம் என்று மாநிலங்களவையில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாய
-
சட்டவிரோதமாக மண் அள்ளியதாக செங்கல் சூளைகளுக்கு ரூ.900 கோடி அபராதம்
08 Dec 2025கோவை, சட்டவிரோதமாக மண் அள்ளியதாக செங்கல் சூளைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
-
98.92 கோடி ரூபாய் செலவில் புதிய மீன் விதை பண்ணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
08 Dec 2025சென்னை, புதிய மீன் விதைபண்ணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
வரும் 11-ம் தேதி தே.ஜ. கூட்டணி எம்.பி.க்களுக்கு விருந்தளிக்கிறார் பிரதமர் மோடி
08 Dec 2025புதுடெல்லி, ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், பாராளுமன்ற அவை வியூகத்தை நெறிப்படுத்தவும் வரும் 11-ம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சிறப
-
த.வெ.க. தங்களது தலைமையில் புதிய அணியை கட்டமைக்க முயற்சி: டிடிவி தினகரன் பரபரப்பு
08 Dec 2025திருப்பூர், த.வெ.க. தங்களது தலைமையில் புதிய அணியை கட்டமைக்க முயற்சி செய்து வருகிறது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
100 சதங்கள் அடிப்பார்: கோலி மீது கவாஸ்கர் நம்பிக்கை
08 Dec 2025மும்பை, கோலியால் 100 சதங்கள் ஏன் அடிக்க முடியாது? என்று கேள்வி எழுப்பியுள்ள சுனில் கவாஸ்கர், அவர் இன்னும் 3 ஆண்டுகள் விளையாடினால் கூட 16 சதங்கள் தான் தேவை.
-
இன்று தொடங்கும் டி-20 தொடருக்கு ஹார்திக், சுப்மன் கில் தயார்: கேப்டன் சூர்யகுமார் யாதவ்
08 Dec 2025மும்பை, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவதற்கு ஹார்திக் பாண்டியா மற்றும் சுப்மன் கில் தயாராக இருப்பதாக இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவ
-
கிரீமிலேயருக்கு ஆதரவாக பேசியதாக என் மீது குற்றம் சாட்டப்பட்டது: சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி வேதனை
08 Dec 2025மும்பை, கிரீமிலேயருக்கு ஆதரவாக பேசியதாக என் மீது குற்றம் சாட்டினர் என்று முன்னாள் தலைமை நீதிபதி பிஆர் கவாய் வேதனை தெரிவித்துள்ளார்.


