முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

100 சதங்கள் அடிப்பார்: கோலி மீது கவாஸ்கர் நம்பிக்கை

திங்கட்கிழமை, 8 டிசம்பர் 2025      விளையாட்டு
Gavaskar 2023 06 09

மும்பை, கோலியால் 100 சதங்கள் ஏன் அடிக்க முடியாது? என்று கேள்வி எழுப்பியுள்ள சுனில் கவாஸ்கர், அவர் இன்னும் 3 ஆண்டுகள் விளையாடினால் கூட 16 சதங்கள் தான் தேவை. தற்போது அவர் சிறப்பான பேட்டிங் செய்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.

84 சதங்கள்...

தென்ஆப்பிரிக்காக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய வீரர் விராட்கோலி இரண்டு சதங்கள் விளாசினார். ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் அவர் இதுவரை 84 சதங்கள் (ஒரு நாள் போட்டியில் 53, டெஸ்டில் 30 மற்றும் 20 ஓவர் போட்டியில் ஒரு சதம்) அடித்துள்ளார். இந்த வகையில் சச்சின் டெண்டுல்கருக்கு (100 சதம்) அடுத்த இடத்தில் இருக்கிறார்.

ஏன் முடியாது? 

இந்த நிலையில் டெண்டுல்கரின் சாதனையை கோலி சமன் செய்வார் என இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். கவாஸ்கர் கூறும் போது, 'கோலியால் 100 சதங்கள் ஏன் அடிக்க முடியாது? அவர் இன்னும் 3 ஆண்டுகள் விளையாடினால் கூட 16 சதங்கள் தான் தேவை. தற்போது அவர் சிறப்பான பேட்டிங் செய்து வருகிறார்.

100 சதங்களை... 

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் 2 சதம் எடுத்தார். அடுத்து வரும் நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு சதம் அடித்தால் சதங்களின் எண்ணிக்கை 86-ஐ தொடும். அதன் பிறகு அவர் நிச்சயம் 100 சதங்களை எட்டுவதற்கு நல்ல வாய்ப்புள்ளது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் வலுவான அடித்தளம் அமைத்ததால் இந்தியாவின் வெற்றி உறுதி என்பதை உணர்ந்த கோலி தனக்கு தாமே மகிழ்ச்சியுடன் அதிரடியாக விளையாடினார். ஒருநாள் கிரிக்கெட்டில் கோலி இப்படி 20 ஓவர் போட்டி அவதாரம் எடுப்பதை பார்ப்பது அரிது' என்றார்.

40 ஆட்டங்கள்... 

 

மற்றொரு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில், 'தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டங்களில் அடுத்தடுத்து 100 ரன்களுக்கு மேல் எடுத்தார். அவர் சதங்களின் சக்ரவர்த்தி. சூப்பர் பார்மில் உள்ளார். 2027-ம் ஆண்டு உலகக் கோப்பை உள்பட சுமார் 40 ஆட்டங்கள் மீதமுள்ளன. அதனால் அவரால் 100 சதங்கள் எட்ட முடியும்' என்றார். டெஸ்ட் மற்றும் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்ட 37 வயதான கோலி தற்போது ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து