முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

98.92 கோடி ரூபாய் செலவில் புதிய மீன் விதை பண்ணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

திங்கட்கிழமை, 8 டிசம்பர் 2025      தமிழகம்
CM-4-2025-12-08

சென்னை, புதிய மீன் விதைபண்ணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்குதளம் மற்றும் புதிய மீன் விதைப் பண்ணை ஆகியவற்றை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (டிச. 8) தலைமைச் செயலகத்தில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 98 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்குதளம் மற்றும் புதிய மீன் விதைப் பண்ணை  ஆகியவற்றை திறந்து வைத்தார்.

மீன்வளத்தை பாதுகாத்தல், நிலைக்கத்தக்க மீன்பிடிப்பு, மீன் வளர்ப்பு நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலம் மீன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்தல், மீன்பிடி படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்துவதற்கும், மீன்பிடி இடத்திலிருந்து அதன் நுகர்வு வரை சுகாதாரமான முறையில் கையாளப்படுவதை உறுதி செய்வதற்கும் மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள், கரையோர வசதிகள், மீன் சந்தைகள் போன்ற நவீன உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மீன்பிடி தடைகாலங்களில்  மீனவர்களுக்கு நிதியுதவி,  மீன்பிடி படகுகளுக்கு வரிவிலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் வழங்குதல், பாரம்பரிய மீன்பிடி கலன்களுக்கு மண்ணெண்ணெய் மானிய விலையில் வழங்குதல், புதிய சூரை மீன்பிடி தூண்டில் மற்றும் செவுள் வலை விசைப்படகுகளை வாங்கிட மீனவர்களுக்கு 50 விழுக்காடு மானியம் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை மீனவ மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடவும், சமூக பாதுகாப்பினை உறுதி செய்திடவும் தமிழ்நாடு  அரசு  செயல்படுத்தி  வருகிறது. 

மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்குதளம் மற்றும் புதிய மீன் விதைப்பண்ணை ஆகியவற்றை திறந்து வைத்தல் கன்னியாகுமரி மாவட்டம், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில்  60 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ள கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பெரியநாயகி தெரு மீனவ கிராமத்தில் 26 கோடி ரூபாய் செலவில் தூண்டில் வளைவுடன் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளம், மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் 10 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகம், தென்காசி மாவட்டம், கடானா கிராமத்தில் 2 கோடியே 92 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அரசு மீன் விதைப் பண்ணை;-

கன்னியாகுமரி மாவட்டம், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில்  375 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள படகு அணையும் தளம், 110 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள படகு அணையும் சுவர், மீன் ஏலக்கூடம், மீன் பதப்படுத்தும் கூடம், குளிர் பதன கூடம், வாய்க்கால் பாலம் மற்றும் சாலை ஆகிய கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டதால் 68,300 மீனவர்கள் பயன்பெறுவர் மற்றும் 850 விசைப்படகுகள், 4,800  நாட்டு படகுகள் பாதுகாப்பாக நிறுத்த இயலும். கன்னியாகுமரி மாவட்டம், பெரியநாயகி தெரு மீன் இறங்குதளத்தில் 235  மீட்டர் நீளத்திற்கு நீட்டப்பட்டுள்ள தூண்டில் வளைவு மற்றும் வலை பின்னும் கூடம் ஆகிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டதால் 13,021 மீனவர்கள் பயன்பெறுவர் மற்றும் 235 இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகள், 06  நாட்டு படகுகள் பாதுகாப்பாக நிறுத்த இயலும்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் 350 மீட்டர் நீளத்திற்கு  அமைக்கப்பட்டுள்ள படகு அணையும் சுவர், கூடுதல் மீன் ஏலக் கூடம், கூடுதல் வலைப் பின்னும் கூடம், மீன் உலர்தளம், சாலை ஆகிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டதால் 6,073 மீனவர்கள் பயன்பெறுவர் மற்றும் 45 விசைப் படகுகள், 310 கண்ணாடி நாரிழை படகுகள் பாதுகாப்பாக நிறுத்த இயலும். தென்காசி மாவட்டம், கடானா அரசு மீன் விதைப் பண்ணையில் மீன் வளர்ப்பு தொட்டிகள் மற்றும் இதர உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டதால் ஆண்டுக்கு 5 லட்சம் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்து உள்நாட்டு மீன்வளத்தை உயர்த்த இயலும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து