எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபத்திருவிழாவை முன்னிட்டு நெய் தீபங்கள் ஏற்றி வழிபாடு நடந்தது. திருப்பதி தேவஸ்தான அதிகாரி அனில்குமார் சிங்கால், கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி ஆகியோர் தங்கக்கொடி மரத்தில் நெய்தீபம் ஏற்றினர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடந்தது. மூலவர் ஏழுமலையானுக்கு கைங்கர்யங்கள், நிவேதனங்கள் நிறைவடைந்த பிறகு தீபத்திருவிழா நடந்தது. தீபங்களை ஜீயர் சுவாமிகள், அதிகாரிகள், அர்ச்சகர்கள் தங்கள் கைகளில் ஏந்தியவாறு விமானப் பிரதட்சணம் செய்தனர். அதன்பிறகு ஆனந்த நிலையத்தில் எழுந்தருளிய ஏழுமலையானுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து கருவறை, அகண்டம், குலசேகரப்படி, ராமுலவாரி மேடை, துவார பாலகர்கள், கருடாழ்வார், வரதராஜசாமி சன்னதி, வகுளமாதா, தங்கக்கிணறு, கல்யாண மண்டபம், பாஷ்யகாரர் சன்னதி, யோக நரசிம்மர், விஷ்வக்ஸேனர், சந்தன அறை, பரிமள அறை, வெள்ளி வாசல், கொடிக்கம்பம், பலிபீடம், சேத்ரா பாலகர் சன்னதி, திருமலைராய மண்டபம், பூலபாவி (பூக்கிணறு), ரங்கநாயக்கர் மண்டபம், மகாதுவாரம், பேடி ஆஞ்சநேயர் கோவில், வராகசாமி கோவில், ஸ்ரீவாரி புஷ்கரணி என கோவிலுக்கு உள்ளேயும் வெளியிலும் பல்வேறு இடங்களில் நெய் தீபங்கள் ஏற்றப்பட்டன.
தீபத்திருவிழாவையொட்டி கோவிலில் நேற்று சஹஸ்ர தீப அலங்கார சேவை, பௌர்ணமி கருடசேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டதாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


