முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

த.வெ.க. மீது சீமான் விமர்சனம்

திங்கட்கிழமை, 18 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Seeman 2024-03-27

Source: provided

சென்னை : தமிழக வெற்றிக்கழகம் மீது சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்று நாம் தமிழர் கட்சி உறுப்பினர்களும் சட்டசபைக்குள் நுழைவார்கள் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் கணக்குப்போட்டு வைத்திருந்தார். ஆனால், நடிகர் விஜய்யின் புதிய வரவான தமிழக வெற்றிக் கழகமும் சட்டசபை தேர்தலை முதன்முறையாக சந்திப்பதால், அது நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கியையும் பாதிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர். 

இது நாம் தமிழர் கட்சியின் வெற்றிப் பயணத்துக்கு முட்டுக் கட்டையாக அமையும் என்று கூறப்படுகிறது. இது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அதிருப்தி அடையச் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதன் வெளிப்பாடே, இப்போதைய அவரது பேச்சில் தமிழக வெற்றிக் கழகத்தை சீண்டுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், தமிழக வெற்றிக் கழகத்தை வம்புக்கு இழுப்பதுபோல் சில கருத்துகளை கூறினார். அவர் பேசும்போது, "த.வெ.க. கொள்கை என்னவென்று கேட்டால், தளபதி.. தளபதி.. என்று அக்கட்சி தொண்டர்கள் சொல்கிறார்கள். அது எனக்கு தலைவலி என்று கேட்டது. அதேபோல், நீங்கள் எதற்காக வந்தீர்கள் என்று கேட்டால் டி.வி.கே. என்று சொல்கிறார்கள். எனக்கு டீ விற்க வந்ததாக கேட்கிறது" என்று கூறிய சீமான், த.வெ.க. தொண்டர்களை அணிலுடன் ஒப்பிட்டும் பேசினார். 

இது தமிழக வெற்றிக்கழக தொண்டர்களை எரிச்சல் அடைய செய்துள்ளது. என்றாலும், சீமான் திடீரென தமிழக வெற்றிக் கழகத்தை விமர்சிப்பதற்கு காரணம், நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சத்தால்தான் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து