முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேட்டோவை மறந்து விடுங்கள்: ஜெலன்ஸ்கிக்கு ட்ரம்ப் ‘செக்’

திங்கட்கிழமை, 18 ஆகஸ்ட் 2025      உலகம்
Trump-Zelensky 2024-11-16

Source: provided

வாஷிங்டன் : கிரிமியா, நேட்டோவை மறந்து விடுங்கள் என்று ஜெலன்ஸ்கிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிடமிருந்து கிரிமியாவை திரும்பப் பெறுவது, நேட்டோவில் உறுப்பு நாடாவது போன்ற எண்ணங்களை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கைவிட்டுவிட்டால், போர் நிறுத்தம் உடனடியாக சாத்தியப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெவித்துள்ளார்.

கிரிமியாவை ரஷ்யாவின் ஒரு பகுதியாகவே அங்கீகரிக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறிவருகிறார். ட்ரம்ப்பின் இந்த முடிவுக்கு உக்ரைன் நிச்சயமாக உடன்படாது என்றே கணிக்கப்படுகிறது. மேலும், ட்ரம்ப்பின் இந்த நிலைப்பாடு, ரஷ்ய ஆதரவுப் போக்கு என்றும் விமர்சிக்கப்படுகிறது. பல காலமாக சர்ச்சைக்குரிய பகுதியாக கிரிமியா இருக்கும் நிலையில், ட்ரம்ப்பின் இந்த நிலைப்பாடு போர் நிறுத்தத்துக்கு வழிவகுக்காது, மாறாக ஒரு புதிய சிக்கலுக்கே வழி வகுக்கும் என்றும் கூறப்படுகிறது. நேட்டோவை எதிர்க்கும் ரஷ்யா - நேட்டோ என்பது வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ் உள்பட 12 நாடுகள் சேர்ந்து 1949-இல் இந்த ராணுவ கூட்டு அமைப்பை உருவாக்கின. இதில் உறுப்பினராக உள்ள எந்தவொரு நாடு மீது ஆயுத தாக்குதல் நடந்தால், அந்த நாட்டைக் காக்க மற்ற உறுப்பு நாடுகள் ஓரணியாக சேர்ந்து இயங்க வேண்டும்.

அந்த வகையில், உக்ரைனை நேட்டோவில் உறுப்பு நாடாக இணைத்தால், ரஷ்யாவிடமிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்பது உக்ரைனின் கணக்கு. 1990-களில் இருந்தே உக்ரைன் நேட்டோ அமைப்புடன் இணக்கம் காட்டி வந்தாலும் கூட 2014-ல் உக்ரைனில் அமைந்த ஆட்சி, முழுக்க முழுக்க மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவான ஆட்சி. அந்த ஆட்சி உக்ரைனை நேட்டோவுடன் இணைப்பதில் அதி தீவிரம் காட்டியது. இதுதான் ரஷ்யா - உக்ரைன் போருக்கான மிக முக்கிய புள்ளி என்றாலும் அது தகும்.

ஏனெனில் உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் அங்கே அமெரிக்காவின் கை ஓங்கும், அது நமக்கு பேராபத்து என்று கருதியது ரஷ்யா. இதனாலேயே ரஷ்யா, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ட்ரம்ப் வைத்த செக்-கும்; ஜெலன்ஸ்கி எதிர்வினையும் - இந்தச் சூழலில், ஜெலன்ஸ்கியை சந்திக்கும் சில மணி நேரங்களுக்கு முன்னர் புயலைக் கிளப்பும் பதிவொன்றை பதிவிட்டுள்ளார் டொனால்டு ட்ரம்ப். இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பதிவில், “உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி விரும்பினால் ரஷ்யாவுடனான போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர முடியும். இல்லை போரை தொடர்ந்து நடத்த அவர் விரும்பினால், அவர் போராடலாம். 

இந்த போர் எப்படி தொடங்கியது என்பதை நினைத்துப் பாருங்கள். நேட்டோ அமைப்பில் உக்ரைனை இணைக்கக் கூடாது. சில விஷயங்கள் ஒருபோதும் மாறாது. அதேபோல் 12 ஆண்டுகளுக்கு முன்னர் கிரிமியாவை ஓர் அமைதி ஒப்பந்தம் மூலம் ரஷ்யாவுக்கு வழங்கினார் ஒபாமா. அதை மாற்றமுடியும் என்று உக்ரைன் நினைக்கக் கூடாது” என்று தெரிவித்துள்ளார். ட்ரம்ப்பின் இந்தக் கருத்துக்கு உடனடியாக எதிர்வினையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “கிரிமியாவை ரஷ்யாவுக்கு தாரை வார்த்தது போன்ற மாஸ்கோவுக்கான சலுகைகள் புதினை வலுப்படுத்தியுள்ளது. கிரிமியா இழப்பின் விளைவாக, அதன் பின்னர் இன்னும் சில கிழக்குப் பிராந்தியங்கள், அப்புறம் டான்பாஸை இழந்தோம். இவை புதுப்புதுத் தாக்குதல்களை எங்களை நோக்கி ஏவ புதினுக்கு புதிய உத்வேகம் தருகிறது. உக்ரைனுக்கு வாய் வார்த்தைகளாக வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் பலிக்கவில்லை. நாங்கள் போரை நிறுத்த விரும்புகிறோம். கூடவே, அது நீடித்த அமைதிக்கு வழிவகுக்க வேண்டும் என்றும் விரும்புகிறோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து