முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெ.ஆ. அணியில் இளம் வீரர்

திங்கட்கிழமை, 18 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
South-Africa 2025-06-17

Source: provided

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது. 

முதல் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளரான க்வேனா மபாகா சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

______________________________________________________________________________________________

ரூட்லிப் ஜோடி சாம்பியன்

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தின் எரின் ரூட்லிப் - கனடாவின் கேப்ரியலா டப்ரோவ்ஸ்கி ஜோடி, சீனாவின் குவோ ஹன்யு - ரஷியாவின் அலெக்ஸாண்ட்ரா பனோவா ஜோடியுடன் மோதியது.

இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய எரின் ரூட்லிப் ஜோடி 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் குவோ ஹன்யு - அலெக்ஸாண்ட்ரா பனோவா ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

______________________________________________________________________________________________

ஆசிய கோப்பை ப்ரோமோ

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. டி20 வடிவில் நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. தலா 4 அணிகள் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடக்கிறது. இதில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்தச் சுற்றில் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் 28-ம்தேதி பைனலில் மோதும். ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா வரும் 14-ம் தேதி பாகிஸ்தானுடன் துபாயில் மோதுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான ப்ரோமோவை சோனி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

______________________________________________________________________________________________

ஆர்.சி.பி வீரருக்கு ஆதரவு

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஆர்.சி.பி அணியின் முன்னணி வீரரான புவனேஷ்வர் குமாரை சேர்க்க வேண்டும் என முன்னாள் வீரரான ஸ்ரீகாந்த் தனது கருத்தை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, புவனேஷ்வர் குமாரை கொண்டு வருவது குறித்து யோசிக்கலாம். தற்போது அவர் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் அவர் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தவில்லை. ஆனால் அதற்கு முன்பு அவர் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அவர் இந்திய அணிக்காக விளையாடவில்லை, ஆனால், ஐ.பி.எல் தொடரில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.மக்கள் ஏன் அவரைப் பார்ப்பதில்லை என்று எனக்கு தெரியவில்லை. புவி ஒரு சிறந்த புதிய பந்துவீச்சாளர். புவனேஸ்வர் குமாரை தற்போது மிகவும் தீவிரமாக பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து