எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
டெல்லி : அலாஸ்காவில் நடந்த பேச்சுவார்த்தை குறித்து பிரதமர் மோடியுடன் ரஷ்யா அதிபர் தொலைபேசியில் விளக்கமளித்தார்.
உக்ரைன், ரஷ்யா இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், ரஷ்ய அதிபர் புதினும் கடந்த 5ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தினர். அமெரிக்காவின் அலாஸ்காவில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அமெரிக்காவின் வெள்ளைமாளிகையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் ஐரோப்பிய நாடுகளின் முக்கிய தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் மோடியுடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். தொலைபேசி மூலம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில், உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்பாக அலாஸ்காவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை சந்தித்தது குறித்து பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் புதின் பேசினார். அதேவேளை, உக்ரைன் விவகாரத்தில் அமைதியான தீர்வு எட்ட வேண்டும் என புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு அலாஸ்காவில் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உடனான சந்திப்பு குறித்து பேசிய எனது நண்பரான ரஷ்ய அதிபர் புதினுக்கு நன்றி. உக்ரைன் போருக்கு அமைதியான முறையில் தீர்வுகாண இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதற்கான அனைத்து முயற்சிகளுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும். நமது தொடர்ச்சியான பேச்சுவார்த்தை, பரிமாற்றம் வரும் நாட்களில் இருக்கும் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


