எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
டெல்லி : தமிழகத்தின் நியாயமான கோரிக்கையை மத்திய நிதி அமைச்சர் நீர்மலா சீதாராமன் ஏற்பார் என நம்புவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தி.மு.க. எம்.பி. கனிமொழி சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, 2025-26ம் ஆண்டு நிதியாண்டில் நபார்டு வங்கியின் ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.4,500 கோடிக்கான நிதியையும், மீன்வள உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் குளச்சல் மீன்பிடித் துறைமுக விரிவாக்கத்திற்கு ரூ. 350 கோடி நிதியையும் விரைந்து வழங்கிட ஒப்புதல் அளிக்குமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.
இந்நிலையில், குளச்சல் துறைமுக விரிவாக்கப்பணி தொடர்பாக தமிழகத்தின் நியாயமான கோரிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்று உரிய நிதியை விடுவிப்பார் என நம்புவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- குளச்சல் துறைமுக விரிவாக்கப் பணிகளைத் தொடங்கிட வேண்டும் என குமரி மாவட்ட மீனவர்கள் என்னை சந்தித்து, தங்களது கோரிக்கையை முன்வைத்துள்ளனர். தமிழ்நாட்டின் இந்த நியாயமான கோரிக்கையை மத்திய நிதி அமைச்சர் ஏற்றுக்கொண்டு, விரைவில் உரிய நிதியை விடுவிப்பார் என நம்புகிறேன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


