Idhayam Matrimony

ஆப்பிரிக்கா: கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 52 பேர் உயிரிழப்பு

செவ்வாய்க்கிழமை, 19 ஆகஸ்ட் 2025      உலகம்
Africa 2025-08-19

Source: provided

கின்சாஷா : ஆப்பிரிக்க நாட்டில் கிராமத்துக்குள் புகுந்து கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 52 பேர் உயிரிழந்தனர்.

ஆப்பிரிக்காவின் 2-வது பெரிய நாடு காங்கோ ஜனநாயக குடியரசு. இங்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயல்படுகின்றன. உகாண்டாவை மையமாக கொண்டு செயல்படும் இந்த குழுவினர் எல்லையோர கிராமங்களில் நுழைந்து பொதுமக்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர்.

அதன் ஒருபகுதியாக எம்-23 கிளர்ச்சி குழுவினர் கோமா உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். எனவே இந்த கிளர்ச்சி குழுக்கள் அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.

இந்தநிலையில் கிவு மாகாணம் பாப்பரே கிராமத்துக்குள் கிளர்ச்சி குழுவினர் நுழைந்தனர். அப்போது கண்ணில் படுகிறவர்களையெல்லாம் அந்த கும்பல் துப்பாக்கியால் சுட்டது. இதனால் வீடுகளுக்குள் ஓடிச் சென்று பலர் தப்ப முயன்றனர். ஆனால் அவர்களது வீடுகளும் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதில் 52 பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

மேலும் 100 பேரை பணய கைதிகளாக அந்த கும்பல் கடத்திச் சென்றது. எனவே அவர்களை மீட்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனையடுத்து உகாண்டா எல்லையில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அரசாங்கம் அவர்களை அறிவுறுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து