Idhayam Matrimony

2 அடுக்காக மாறும் ஜி.எஸ்.டி: அனைத்து மாநில நிதியமைச்சர்கள் இன்று டெல்லியில் ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 19 ஆகஸ்ட் 2025      இந்தியா
Nirmala-Seetharaman 2023-04-06

Source: provided

புதுடெல்லி : 2 அடுக்காக மாறும் ஜி.எஸ்.டி. குறித்து மாநில நிதி அமைச்சர்கள் இன்று டெல்லியில் கூடி குழு ஆலோசிக்கவுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கறேற்க தமிழ்நாடு மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு டெல்லி சென்றுள்ளார்.

தற்போது, ஜி.எஸ்.டி. 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்குகள் கொண்டதாக இருக்கிறது. உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பூஜ்யம் அல்லது 5 சதவீத வரி அடுக்கிலும், ஆடம்பர பொருட்கள் மற்றும் புகையிலை போன்ற பாவ பொருட்கள் 28 சதவீத வரி அடுக்கிலும் வருகின்றன.

சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றிய பிரதமர் மோடி, தீபாவளிக்குள் ஜி.எஸ்.டி. கணிசமாக குறைக்கப்படும் என்று கூறினார். அதாவது, 5 சதவீதம், 18 சதவீதம் என 2 அடுக்குகள் கொண்டதாக ஜி.எஸ்.டி.யை சீர்திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதன்படி, 12 சதவீத வரிவிதிப்பில் உள்ள 99 சதவீத பொருட்கள் 5 சதவீத வரிவிதிப்புக்குள் கொண்டுவரப்படும். 28 சதவீத வரிவிதிப்பில் உள்ள 90 சதவீத பொருட்கள் 18 சதவீத வரிவிதிப்புக்குள் கொண்டுவரப்படும். இதன்மூலம், ஜி.எஸ்.டி. குறைந்து, சாமானியர்கள் பயன்படுத்தும் பொருட்களின் விலை குறையும். இதுதவிர, 40 சதவீதம் என்ற சிறப்பு வரி அறிமுகப்படுத்தப்படுகிறது. அதில், புகையிலை, பான் மசாலா, ஆன்லைன் விளையாட்டு உள்பட 5 முதல் 7 பொருட்கள் மட்டுமே இடம்பெறும்.

2 அடுக்குகளாக ஜி.எஸ்.டி. மாற்றப்படுவது பற்றி ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தத்துக்கான மாநில அமைச்சர்கள் குழுவின் பரிசீலனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பீகார் மாநில துணை முதல்-மந்திரி சாம்ராட் சவுத்ரி, இக்குழுவின் அமைப்பாளராக உள்ளார். உத்தரபிரதேச நிதி மந்திரி சுரேஷ்குமார் கன்னா, ராஜஸ்தான் சுகாதார மந்திரி கஜேந்திர சிங், மேற்கு வங்காள நிதி மந்திரி சந்திரிமா பட்டாச்சார்யா, கர்நாடக வருவாய்த்துறை மந்திரி கிருஷ்ண பைரே கவுடா, கேரள நிதி மந்திரி கே.என்.பாலகோபால் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

மேற்கண்ட 6 பேரை கொண்ட மாநில அமைச்சர்கள் குழு கூட்டம் இன்றும், நாளை டெல்லியில் நடக்கிறது. அதில், 2 அடுக்குகளாக ஜி.எஸ்.டி. மாற்றப்படுவது பற்றி குழு ஆலோசனை நடத்துகிறது. மத்திய அரசு இக்குழுவில் இடம்பெறவில்லை. இருப்பினும், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அந்த கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தை அமைச்சர்கள் குழு நன்றாக புரிந்து கொள்ளவும், சீர்திருத்தத்தின் பின்னால் உள்ள சிந்தனையை தெரிந்து கொள்ளவும் நிர்மலா சீதாராமன் உரை உதவும் என்று கருதப்படுகிறது.

ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்துக்கு மாநில அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்தால், அதன்பிறகு, நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜி.எஸ்.டி. கவுன்சில் அடுத்த மாதம் பரிசீலிக்கும். கவுன்சிலும் ஒப்புதல் அளித்தால், 2 அடுக்குமுறை அமலுக்கு வரும். இதற்கிடையே, ஜி.எஸ்.டி.யில் மத்திய, மாநில அரசுகள் சம பங்குதாரர்கள் என்று மத்திய அரசு கூறியுள்ளது. முன்னனதாக இந்த கூட்டத்தில் பங்கறேற்க தமிழ்நாடு மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு டெல்லி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து