முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் படைவீரர்களுகளை தொழில்முனைவோராக்கும் 'காக்கும் கரங்கள்' திட்டம் தொடக்கம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் - தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை கடன்

செவ்வாய்க்கிழமை, 19 ஆகஸ்ட் 2025      தமிழகம்
CM-4 2025-08-19

Source: provided

சென்னை : சென்னையில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று (ஆக. 19) தொடக்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் முன்னாள் படை வீரர்களை தொழில் முனைவோராக்க ரூ.1 கோடி வரை கடன் வழங்கப்படுகிறது.

முதல்வர் அறிவிப்பு...

முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சாா்ந்தோரின் நலனுக்காக ‘முதல்வரின் காக்கும் கரங்கள்‘ என்ற புதிய திட்டத்தின்கீழ் தொழில் தொடங்க ரூ. 1 கோடி வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் என முதல்வர் முன்னதாக அறிவித்திருந்தார். இத்திட்டத்தில், முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படைவீரர்களின் மறுமணம் ஆகாத கைம்பெண்கள், படை பணியின்போது இறந்த படைவீரர்களின் கைம்பெண்கள், தகுதியுள்ள முன்னாள் படைவீரர்களின் மகன்கள் மற்றும் மணமாகாத, கணவனை இழந்த மகள்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.

மூலதன மானியம்...

இத்திட்டத்தின் கீழ், முன்னாள் படைவீரர்கள் பல்வேறு தொழில் தொடங்குவதற்கு ஒரு கோடி ரூபாய் வரையில் வங்கியின் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டு, தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 விழுக்காடு மூலதன மானியமும், 3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும். மேலும், பயனடைவோருக்கு மூலதன மானியம் மற்றும் வட்டி மானியம் வழங்கப்படுவதால் கடன் சுமை குறையும். 

தேர்வு பணிக்குழு... 

இத்திட்டத்தின் கீழ், முன்னாள் படைவீரர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களை கூர்ந்தாய்வு செய்வதற்கு, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்ட மாவட்ட அளவிளான தேர்வு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் ஒப்புதலின் அடிப்படையில் விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட வங்கிக்கு தொழில் தொடங்குவதற்கான கடன் ஒப்புதல் வேண்டி பரிந்துரைக்கப்படுகிறது. இவ்வங்கிகளால் மேலும் சீராய்வு செய்யப்பட்டு தற்காலிக ஒப்புதல் ஆணை வழங்கப்படும்.

500 பேர் பயன்....

தொழில் தொடங்குவதற்கான வங்கியின் தற்காலிக ஒப்புதல் பெற்றவர்களுக்கு அரசு செலவில் சென்னை- தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் தொழில் முனைவோர் மேம்பாடு பயிற்சி அளிக்கப்படும். இறுதியாக தொழில் தொடங்குவதற்கு தேவைப்படும் கடனுதவி சம்பந்தப்பட்ட வங்கிகளால் கடன் இறுதி ஒப்பளிப்பு அளிக்கப்படும். வருங்காலங்களில் தமிழ்நாடு அரசு, நிதி நிறுவனங்களுடன் இணைந்து 500 முன்னாள் படைவீரர்கள் பயனடையும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். 

தியாகம், சேவை...

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் முன்னாள் படைவீரர்களின் தியாகத்தையும் சேவையையும் அங்கீகரித்து, அவர்களுக்கு நீடித்த வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குவதிலும், அவர்தம் குடும்பங்களையும் சமூகத்தையும் வலுப்படுத்துவதிலும் அரசின் உறுதியை எடுத்துக்காட்டுகிறது. இந்த நிகழ்ச்சியில், மனிதவள மேலாண்மைத் துறை மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர் முருகானந்தம், பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், சிறப்பு செயலாளர் மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை இயக்குநர் சஜ்ஜன்சிங் ரா சவான் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து