எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
லக்னோவில்...
இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகள் தங்களுக்குள் இரண்டு அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 16 முதல் 19 வரையும், இரண்டாவது போட்டி செப்டம்பர் 23 முதல் 26 வரையும் லக்னோவில் நடைபெறவுள்ளது.
கேப்டனாக...
இந்த நிலையில், ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான இந்த அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டரான துரூவ் ஜுரெல் அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்தியா ஏ அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஷ்ரேயாஸ் ஐயர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.
இந்தியா ஏ அணி விவரம்:
ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், என்.ஜெகதீசன், சாய் சுதர்சன், துரூவ் ஜுரெல் (துணைக் கேப்டன்), தேவ்தத் படிக்கல், ஹர்ஷ் துபே, ஆயுஷ் பதோனி, நிதீஷ் குமார் ரெட்டி, தனுஷ் கோட்டியான், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், கலீல் அகமது, மானவ் தர், யஷ் தாக்குர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


