முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்: மீண்டும் ஒரு உரிமைப் போரை நடத்தி நாட்டை பாதுகாப்போம் கரூர் தி.மு.க. முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை

புதன்கிழமை, 17 செப்டம்பர் 2025      தமிழகம்
Stalin 2024-12-21

Source: provided

கரூர்: தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று தெரிவித்துள்ள தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், மீண்டும் ஒரு உரிமைப் போரை நடத்தி நாட்டை பாதுகாப்போம் என்று கரூரில் நேற்று நடைபெற்ற தி.மு.க. முப்பெரும் விழாவில் சூளுரைத்துள்ளார்.

முப்பெரும் விழாவாக...

தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15-ம் தேதி, பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 17-ம் தேதி மற்றும் தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 17-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு தி.மு.க. முப்பெரும் விழா கரூர் கோடங்கிபட்டியில் நேற்று நடைபெற்றது.  இவ்விழாவில் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். 

தொண்டர்கள் வரவேற்பு....

இந்த முப்பெரும் விழாவிற்காக 1 லட்சம் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனர். மாலை 5 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் முப்பெரும் விழா நடைபெறும் இடத்திற்கு வருகை தந்தார். அப்போது ஸ்டாலின் வரும் வழியில் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கூட்டத்திற்கு மத்தியில் ஸ்டாலின் வாகனத்தில் ரோடு ஷோ போல வருவதற்காக வழி அமைக்கப்பட்டு இருந்தது. அப்போது இருபுறமும் கூடியிருந்த தொண்டர்கள் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 

ரோடு போடுவார்... 

பின்னர் விழாவில் பேசிய ஸ்டாலின், மேற்கு மண்டலத்தில் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக உள்ளார் செந்தில் பாலாஜி. பொதுக்கூட்டம் என்று சொல்லிவிட்டு மாபெரும் எழுச்சி மாநாட்டை ஏற்பாடு செய்து இருக்கிறார் செந்தில் பாலாஜி. நாம கோடு போட சொன்னால் ரோடு போடுவார். ரோடு போட்டு அந்த ரோடு மேலதான் நான் வாகனத்தில் வந்தேன். மேற்கு மண்டலத்தில் எதிரிகளுக்கு எல்லாம் சிம்ம சொப்பனமாக இருக்க கூடியவர்தான் செந்தில் பாலாஜி. அதனால்தான் செந்தில் பாலாஜி வெளியில் இருந்தால் தங்களால் நிம்மதியாக தூங்க முடியாது என்று அவரை முடக்கபார்த்தார்கள். ஆனால் அவரை முடக்க முடியுமா? எடுத்த பணியை வெற்றிகரமாகமுடித்துக்காட்டுவார். நான் உறுதியாக சொல்கிறேன். கழக வரலாற்றில் இப்படியெரு பிரமண்டமான முப்பெரும் விழா நடைபெற்று இருக்காது” என்றார்

உண்மையாக உழைக்கிறோம்...

பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் நின்று உண்மையாக உழைக்கிறோம். தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் திராவிட மாடல் ஆட்சி 2.0 அமையும். நாட்டிலேயே முதலில் ஆட்சியை பிடித்த மாநில கட்சி தி.மு.க.. மிரட்டலுக்கு பயப்படும் கட்சி தி.மு.க. அல்ல. ஈராயிரம் ஆண்டுகளாக காவி கூட்டத்துடம் போராடி வருகிறோம். 

தி.மு.க.வை அசைக்க முடியாது...

தி.மு.க.வுக்கு மாற்று, மாற்றம் என்றவர்கள் எல்லாம் மறைந்து போனார்கள். தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. தி.மு.க.வுக்கு மாற்று, மாற்றம் என்று கூறியவர்கள் எல்லாம் மறைந்துபோனதாகவும், தமிழ்நாட்டை ஒருநாளும் தலைகுனிய விடமாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடிமையிஸமாக மாறி...

'எதிர்க்கட்சித் தலைவருக்கான மாண்பை அறியாதவர் எடப்பாடி பழனிசாமி. திராவிடக் கொள்கை தெரியாமல் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். அண்ணாயிஸத்தை அமித்ஷாவிடம் அடிமையிஸமாக அவர் மாற்றியுள்ளார். டெல்லியில் அமித்ஷாவை சந்தித்துவிட்டு காரில் போன பழனிசாமியை பார்த்து எல்லோரும் கேட்பது, 'முழுதாய் நனைந்த பிறகு முக்காடு எதற்கு? காலிலேயே விழுந்தபிறகு முகத்தை மூட கைக்குட்டை எதற்கு?' என்பதுதான்.

பா.ஜ.க.வுக்கு இடமில்லை...

காவிக் கொள்கையால் தமிழ்நாட்டிற்கு ஏராளமான பிரச்னைகள். ஈராயிரம் ஆண்டுகளாக காவிக் கூட்டத்துடன் நாம் போராடி வருகிறோம். இது ஆட்சி அதிகாரத்துக்கான போராட்டம் அல்ல; தமிழ்நாட்டுக்கான போராட்டம். டெல்லியின் ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மத்திய பா.ஜ.க. அரசை தி.மு.க. நேரடியாக எதிர்த்து வருகிறது. அடக்குமுறைக்கும், ஆதிக்கத்துக்கும் தமிழ்நாட்டில் இடம் இல்லை. மொத்தத்தில் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு இடமில்லை. தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம். மீண்டும் ஒரு உரிமைப் போரை நடத்தி நாட்டை பாதுகாப்போம் என்று அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து