முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமேசான் காடுகள் அழிப்புக்கு எதிராக குரல்: 2,250 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மர்மச்சாவு..!

வியாழக்கிழமை, 18 செப்டம்பர் 2025      உலகம்
Suicide 2023 04 29

Source: provided

பிரேசிலியா: அமேசான் காடுகள் அழிப்புக்கு எதிராக குரல் எழுப்பிய 2,250 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மர்மமாக இறந்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் அமெரிக்க கண்டத்தின் வடபகுதியில் சுமார் 70 லட்சம் சதுர கி.மீ பரப்பளவில் அமேசான் காடுகள் பரந்து விரிந்து காணப்படுகிறது. உலக நாடுகளில் உள்ள மொத்த காடுகளையும் சேர்த்தாலும் அவற்றையெல்லாம் விட அமேசான் காடுகளின் பரப்பளவு அதிகம். இங்குள்ள மரங்களில் இருந்து ஆண்டுக்கு 60 ஆயிரம் கோடி டன் ஆக்சிஜன் வெளியேற்றப்படுகிறது.

லண்டனை தலைமையிடமாக கொண்டு குளோபல் விட்னஸ் என்ற ஆய்வு நிறுவனம் உலக அளவில் செயல்பட்டு வருகிறது. மனித-இயற்கை இடர்பாடுகள், சுரண்டல்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் தொடர்பாக ஆய்வு செய்து வருகிறது. தற்போது பகீர் அறிக்கை ஒன்றை இது வெளியிட்டுள்ளது. 

அந்த அறிக்கையில் கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கி கடந்த ஆண்டு வரை (2024), 12 ஆண்டுகளில் அமேசான் காடுகள் அழிப்புக்கு எதிராக போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் 2,253 பேர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக பிரேசிலில் 365 பேர், கொலம்பியாவில் 250 பேர், பெருவில் 225 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் (2024) மட்டும் 124 பேர் இறந்துள்ளதாகவும், ஆண்டுதோறும் இந்த பலி எண்ணிக்கை உயர்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து