முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்மன் கில் கேப்டன் ஆவதை அன்றே கணித்த ரோகித் சர்மா

திங்கட்கிழமை, 6 அக்டோபர் 2025      விளையாட்டு
Rohit-Sharma 2023-05-17

Source: provided

மும்பை : சுப்மன் கில் கேப்டன் ஆவதை ரோகித் சர்மா அன்றே கணித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கேப்டன் பதவியில்... 

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுகிறது. ஒரு நாள் போட்டிகள் வருகிற 19-ந் தேதி, 23-ந் தேதி மற்றும் 25-ம் தேதிகளில் நடக்கிறது. ரோகித் சர்மா ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றாலும் கேப்டன் பதவியில் இருந்து கழற்றி விடப்பட்டார். டெஸ்ட் கேப்டனான சுப்மன் கில் ஒரு நாள் போட்டிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 2027-ம் ஆண்டு உலக கோப்பையை கருத்தில் கொண்டு தேர்வு குழு இந்த முடிவை மேற்கொண்டு உள்ளது. அதன் முதல்கட்ட பணியாகத்தான் ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது.

கேள்விக்குறியாகி... 

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர் ரோகித் சர்மா 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டார். ஒருநாள் ஆட்டத்தில் மட்டுமே ரோகித் விளையாடி வரும் நிலையில், அவரது கேப்டன் பதவி பறிக்கப்பட்டதால் அவரின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. 

45 எண் ஜெர்சியை...

இந்நிலையில், ரோகித் சர்மாவின் பழைய டுவீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 13 ஆண்டுகளுக்கு முன்பு 2012 ஆம் ஆண்டு ரோகித் தனது எக்ஸ் பதிவில், "45 எண் கொண்ட ஜெர்சியை பயன்படுத்தாமல் 77 எண் கொண்டஜெர்சியை அணிந்து விளையாட போவதாக ரோகித்" தெரிவித்திருந்தார். அதன்படி சில காலத்திற்கு 77 ஜெர்சியை அணிந்து ரோகித் விளையாடினார். 

ரோகித் முன்னரே... 

ஆனால் பின்னர் மீண்டும் 45 எண் கொண்ட ஜெர்சியை அணிந்து விளையாடிய ரோகித் தற்போது வரை அந்த ஜெர்சியை பயன்படுத்தி வருகிறார். தற்போது கேப்டனாக நியமிக்கப்பட்ட கில் 77 எண் கொண்ட ஜெர்சியில் விளையாடி வருகிறார். அவ்வகையில் தனக்கு அடுத்து யார் கேப்டனாக ஆகா போகிறார் என்பதை ரோகித் முன்னரே கணித்து விட்டார் என்று இணையத்தில் நெட்டிசன்கள் ஜாலியாக பதிவிட்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து