முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வின் பிடியில் இருக்கிறாரா விஜய்? நயினார் நாகேந்திரன் பதில்

வியாழக்கிழமை, 2 அக்டோபர் 2025      தமிழகம்      அரசியல்
Narnar 2025-09-21

சென்னை, பா.ஜ.க.வின் பிடியில் இருக்கிறாரா விஜய் என்ற கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார்.

சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள காந்தி சிலைக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய்யின் பரப்புரையின்போது மின் தடையை ஏற்படுத்தியது யார்? கூட்டத்தின் நடுவே செருப்பை வீசியது யார்? இந்த சம்பவத்தின்போது போலீசார் என்ன செய்து கொண்டிருந்தனர்? தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கேட்ட இடத்தில் மாவட்ட நிர்வாகம் ஏன் அனுமதி வழங்கவில்லை? எதற்காக பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்? கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக ஆம்புலன்ஸ்கள் வருவதற்கு காரணம் என்ன?

முதல்வர் வரும்போது மட்டும் ரவுண்டானா போன்ற பெரிய இடங்களில் அனுமதி கொடுக்கிறார்கள். இதையெல்லாம் அவர்கள் சீர்தூக்கி பார்க்க வேண்டும். தனிநபர் ஆணையம் விசாரணை செய்து கொண்டிருக்கும்போது அரசு அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் செய்தியாளர்களை சந்திப்பது தவறு. தி.மு.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில், வேலியே பயிரை மேய்வது போல திருவண்ணாமலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை இரு காவலர்கள் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். முதல்வரின் கட்டுப்பாட்டில் தமிழக காவல்துறை இல்லை என்பதையே இந்த சம்பவம் உணர்த்துகிறது. பா.ஜ.க. எங்களுடைய கொள்கை எதிரி என்று விஜய் சொல்லிக்கொண்டு இருக்கிறார். அப்படி இருக்கும்போது அவர் எப்படி பா.ஜ.க.வின் பிடியில் இருப்பார்? இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து