முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உமாபதி ராமையா இயக்கும் புதிய படம்

திங்கட்கிழமை, 6 அக்டோபர் 2025      சினிமா
Umapathy 2025-10-06

Source: provided

கண்ணன் ரவி குரூப்ஸ் மற்றும் காந்தாரா ஸ்டூடியோஸ் நிறுவனம் இணையும் Production No.6 பூஜையுடன் துவங்கியது. இப்படத்தில் நட்டி சுப்ரமணியம் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் இணைந்து, தம்பி ராமையா, ஷ்ரிதா ராவ், சாந்தினி தமிழரசன், விஜி சந்திரசேகர், வடிவுக்கரசி, இளவரசு, எம்.எஸ். பாஸ்கர், கிங்ஸ்லி, ஜான் விஜய், ஆடுகளம் நரேன், VJ ஆண்ட்ரூஸ், சத்யன், சாம்ஸ், கிங்காங், தேவி மகேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இப்படம் பற்றி தயாரிப்பாளர் கண்ணன் ரவி கூறியதாவது, “இந்த படம், நகைச்சுவையுடன் கூடிய அரசியல் களமாக உருவாகிறது. உமாபதி தனது முதல் படத்திலேயே திறமையை நிரூபித்தவர். அவர் இந்தக் கதையைச் சொன்னவுடன், உடனே அதில் மூழ்கிப் போனேன். நட்டி, தம்பி ராமையா, எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர்களிடம் இணைந்து பணியாற்றுவதில் பெருமை கொள்கிறேன். இன்று இப்படப்பிடிப்பைத் துவங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.” பின்னர் இயக்குனர் உமாபதி ராமையா கூறியதாவது, நிஜ சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு நகைச்சுவையுடன் உருவாகும் பொழுதுபோக்கு படமாக இது அமையும் என்றார். கதை, உரையாடல்களை தம்பி ராமையா எழுதி இருக்க, மகன் உமாபதி இயக்குகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து