Idhayam Matrimony

காலையில் குறைந்து விலை மாலையில் உயர்வு: ஒரு சவரன் தங்கம் விலை ரூ.88, 000-ஐ நெருங்கியது

வியாழக்கிழமை, 2 அக்டோபர் 2025      வர்த்தகம்
Gold 2024-04-06

சென்னை, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (அக்.2) காலை கிராமுக்கு ரூ.70 குறைந்த நிலையில் மாலையில் ரூ.70 உயர்ந்த விற்பனையானது. அதன்படி தற்போது, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10.950-க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.87,600-க்கும் விற்பனையானது.

சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு, உக்ரைன் - ரஷ்யா போர், இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் உள்ளிட்ட காரணங்கள் தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

கடந்த 26-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் நேற்று காலை சற்றே குறைந்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி ஒரு நாள் முழுமைக்கும் கூட நீடிக்காமல் மாலையிலேயே கிராமுக்கு ரூ.70 உயர்ந்து விற்பனையானது. ஒரு கிராம் ரூ.11,000-ஐ நெருங்கியுள்ளதால் நகை வாங்குவோர் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். வெள்ளி ஒரு கிராம் ரூ.163-க்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து