முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று புதிய அமைச்சரவை பதவியேற்பு: குஜராத்தில் 16 அமைச்சர்கள் ராஜினாமா

வியாழக்கிழமை, 16 அக்டோபர் 2025      இந்தியா
Gujarat 2024-10-14

குஜராத், இன்று புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ள நிலையில் குஜராத் பா.ஜ.க. அரசின் அமைச்சரவையில் உள்ள 16 அமைச்சர்களும் நேற்று கூட்டாக ராஜினாமா செய்தனர்.

அமைச்சரவை மாற்றம் நடைபெற இருந்த நிலையில் நேற்று முதல்வர் பூபேஷ் படேலை தவிர அனைவரும் கூட்டாக ராஜினாமா செய்தனர். முதல்வரின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. குஜராத் பா.ஜ.க. தலைவர் ஜெகதீஷ் விஸ்வகர்மா, மாநில அமைச்சரவையை முழுமையாக மறுசீரமைக்க வசதியாக அமைச்சர்களை பதவி விலகுமாறு உத்தரவிட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

கூட்டத்தைத் தொடர்ந்து, 16 அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தனர். நேற்று இரவு ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத்திடம் அவற்றை பூபேஷ் படேல் ஒப்படைக்க உள்ளார். புதிய அமைச்சரவை இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணிக்கு காந்திநகரின் மகாத்மா மந்திரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் அறிவிக்கப்பட உள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து