எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, வருகிற ஜனவரி 15-ம் தேதிக்குள் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியை மத்திய உள்துறை அமைச்சகம் நடத்த உள்ளது. இப்பணி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2 கட்டங்களாக தொடங்கும் என்று பாராளுமன்றத்தில் கடந்த 2-ம் தேதி மத்திய அரசு தெரிவித்தது. 2026-ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் வசதிக்கு ஏற்ப 30 நாட்களுக்குள் வீடுகள் கணக்கெடுப்பு நடத்தப்படும். இரண்டாம் கட்டமாக 2027-ம் ஆண்டு மார்ச் 1-ந் தேதி முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்கு அதிகாரிகளை வருகிற ஜனவரி 15-ம் தேதிக்குள் நியமிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்தியப் பதிவாளர் ஜெனரல் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்கான அதிகாரிகள் நியமனத்தை 2026-ம் ஆண்டு ஜனவரி 15-ந்தேதி முடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. சுமார் 700 முதல் 800 பேர்களுக்கு ஒரு கணக்கெடுப்பாளருக்குப் பணி ஒதுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு 6 கணக்கெடுப்பாளர்களுக்கும் ஒரு மேற்பார்வையாளர் நியமிக்கப்பட வேண்டும்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு விதிகள்-1990-ன் விதி 3-ன் படி, ஆசிரியர்கள், எழுத்தர்கள் அல்லது மாநில அரசு மற்றும் உள்ளூர் அதிகார சபையின் எந்தவொரு அதிகாரியும் கணக்கெடுப்பாளராக நியமிக்கப்படலாம். கணக்கெடுப்பாளரை விட உயர்ந்த பதவியில் உள்ள அதிகாரிகள் மேற்பார்வையாளராக நியமிக்க வேண்டும். ஜனவரி 15-ந்தேதிக்குள் மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளை நியமிப்பதை உறுதி செய்ய மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


