எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில், பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை ஒப்படைக்க இன்றே கடைசி நாளாகும்.
தலைமை தேர்தல் ஆணை யத்தின் வழிகாட்டுதல்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் மாதம் 4-ம் தேதி தொடங்கியது. இப்பணிகள் டிச.4-ம் தேதி முடிவடைய இருந்த நிலையில், 11-ம் தேதி (இன்று) வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி 6 கோடியே 40 லட்சத்து 84,624 பேருக்கு படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அதேபோல், கணக்கீட்டு படிவங்களை பதிவேற்றும் பணி 99.55 சதவீதம் முடிவடைந்துள்ளது. அதாவது 6 கோடியே 38 லட்சத்து 25,877 வாக்காளர்களின் படிவங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், கணக்கீட்டு படிவம் பூர்த்தி செய்து பெறுதல், பதிவு செய்தல் ஆகிய பணிகள் நாளையுடன் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் டிச.16-ம் தேதி வெளியிடப்படும். அன்று முதல், வரும் ஜன 15-ம் தேதி வரை ஆட்சேபங்கள் இருந்தால் தெரிவிக்கலாம். மேலும், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் அல்லது ஏற்கெனவே உள்ள பதிவுகள் குறித்து மறுப்பு தெரிவிக்கலாம். அவற்றின் மீது பரிசீலனைகள் நடைபெறும். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.14-ம் தேதி வெளியிடப் படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


