Idhayam Matrimony

ஆஸி.,யில் அமலுக்கு வந்தது 16 வயதிற்கு உள்பட்டோர் சமூக ஊடகங்ளை பயன்படுத்த தடை

புதன்கிழமை, 10 டிசம்பர் 2025      உலகம்
Albanese-2025-12-10

கென்பரா, 16 வயதிற்கு உள்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கான தடை அமலுக்கு வந்தது.

உலகம் முழுவதும் சமூக ஊடகங்களை அனைத்து தரப்பு மக்களும் சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருகின்றனர். சமூக ஊடகத்தை குழந்தைகளும் பயன்படுத்துவதால் அவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. உடல்நலம், மன நலம்  உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இதனிடையே, ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்கு உள்பட்ட சிறுவர், சிறுமியர் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், டிக்டாக் உள்பட அனைத்து வகையான சமூக ஊடகத்தை பயன்படுத்த தடை விதிக்க அந்நாட்டு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும், சிறுவர், சிறுமியரின் சமூக வலைதள கணக்குகளை நீக்கவில்லையென்றால் சமூக ஊடக நிறுவனங்களுக்கு ரூ. 300 கோடி வரை அபராதம் விதிக்கவும் மசோதா நிறைவேற்றப்பட்டது. 

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்கு உள்பட்ட சிறுவர், சிறுமியர் சமூக ஊடகங்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த நடவடிக்கை ஆஸ்திரேலிய சிறுவர், சிறுமியரின் வாழ்வை மாற்றும் சீர்திருத்தமாக இருக்கும் என்று அந்நாடு பிரதமர் அல்பெனீஸ் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து