முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செங்கோட்டையன் - நாஞ்சில் சம்பத் சந்திப்பு

வியாழக்கிழமை, 11 டிசம்பர் 2025      தமிழகம்
Nangil-Senkottaiyan

சென்னை, சென்னையில் த.வெ.க.மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் செங்கோட்டையன் - நாஞ்சில் சம்பத் சந்தித்து பேசி கொண்டனர்.

சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் த.வெ.க. தலைவர் விஜய் பல்வேறு வியூகங்களை அமைத்து பணியாற்றி வருகிறார். கட்சியில் உறுப்பினர் சேர்க்கை ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும், மறுபக்கம் மக்கள் சந்திப்பு, அரசியல் நகர்வுகளில் விஜய்யும், கட்சியின் மாநில நிர்வாகிகளும் தீவிரமாக செயலாற்றுகின்றனர்.

தேர்தல் நெருங்கிவரும் சூழலில், கட்சியை வலுப்படுத்தும் நோக்கிலும், தேர்தல் களப் பணிகளை சீரிய முறையில் முன்னெடுக்கும் வகையில் கட்சி ரீதியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேர்தல், கட்சி தொடர்பான பணிகளை முடுக்கிவிடும் விதமாக முக்கிய நிர்வாகிகள் கூடி ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை அவ்வப்போது செய்கின்றனர்.

அந்த வகையில், நேற்று த.வெ.க. மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமை நிலைய செயலகத்தில் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த், சமீபத்தில் கட்சியில் இணைந்த த.வெ.க. நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். தேர்தல் கூட்டணி, கட்சியின் அடுத்தகட்ட நகர்வு குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

முன்னதாக சமீபத்தில் தவெகவில் இணைந்த செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் இருவரும் சந்தித்து பேசினர். அப்போது ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர். இருவரும் அதிமுகவில் நிர்வாகிகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் செய்தியாளர்களிடம் நாஞ்சில் சம்பத் கூறுகையில், “விமர்சனங்களால் வளர்ந்தவன்.. கனவுகளோடு களத்துக்கு வருகிறேன்” என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து