முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால் உக்ரைனில் விரைவில் தேர்தல் நடத்தப்படும்: அதிபர் ட்ரம்புக்கு ஜெலன்ஸ்கி பதிலடி

வியாழக்கிழமை, 11 டிசம்பர் 2025      உலகம்
Jelensky 2023 06 27

கீவ், உக்ரைனில் தேர்தலை நடத்தாமல் இருக்க போரை நடத்துகிறார் ஜெலன்ஸ்கி என்று அதிபர் ட்ரம்ப் கடுமையாக தாக்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால் அடுத்த 2 முதல் 3 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என்று ஜெலன்ஸ்கி பதிலடி கொடுத்துள்ளார்.

உக்ரைன்–ரஷ்யா இடையேயான போர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைன் நிலப்பரப்பின் 20 சதவீதத்தை ரஷ்யா ஆக்கிரமித்துள்ளது. இரு நாடுகளுக்குமிடையேயான போரால் பெரும் அளவு உயிரிழப்புகளும் பொருள் சேதமும் ஏற்பட்டுள்ளன. வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அமைதி பேச்சுக்களை விரைவுபடுத்தி வருகிறார்.

உக்ரைனிடம் கைப்பற்றிய பிரதேசங்களை ரஷ்யா திருப்பித் தர மறுக்கிறது; இதை உக்ரைன் ஏற்க மறுக்கிறது. இதனால் மோதல் தொடர்ந்து நீடிக்கிறது. இதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் ஐந்தாண்டு பதவிக்காலம் 2019-லேயே முடிவடைந்தது. ஆனால் ரஷ்ய படையெடுப்பால் உக்ரைனில் போர் சட்டம் அமலில் உள்ளதால் தேர்தல் தடைப்பட்டுள்ளது. தற்போது, போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா முன்வைத்த அமைதி திட்டத்துக்கு உக்ரைன் அதிபர் சம்மதம் தெரிவிக்கவில்லை.

இது குறித்து ட்ரம்ப் கூறியதாவது., “உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி போர் விவகாரத்தில் எதார்த்தமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் தேர்தல் நடத்துவதற்கு எவ்வளவு காலம் ஆகும்? அவர்கள் ஜனநாயகம் பற்றிப் பேசுகிறார்கள், ஆனால் அது இனி ஜனநாயகம் இல்லாத நிலைக்கு செல்கிறது,” என்றார். மேலும், தேர்தலை காலம் தாழ்த்தவே போரை நீட்டிப்பதாகவும் ட்ரம்ப் விமர்சித்தார். இதற்கு பதிலடி  கொடுத்த ஜெலன்ஸ்கி, “உக்ரைனில் தேர்தல் நடத்த தயாராக உள்ளோம். வாக்குப்பதிவுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால் அடுத்த 2 முதல் 3 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படும்,” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து