முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

70 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு வரும் லியோனார்ட் வால் நட்சத்திரம்

Image Unavailable

பூமிக்கு அருகே சுமார் 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு மிக நெருக்கமாக வால் நட்சத்திரம் ஒன்று வருகிறது. வானின் அரிய நிகழ்வான இதை பார்ப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக இதை கருதலாம். மேலும் இதை வெறும் கண்ணால் பார்க்க முடியும் என வானியியலாளர்கள் கூறுகின்றனர். இந்த வால் நட்சத்திரம் அரிசோனா பல்கலை கழகத்தைச் சேர்ந்த கிரிகோடி பே லியோ ஹார்ட் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த வால் நட்சத்திரத்துக்கு சி2021 ஏ1 லியோனார்ட் என பெயரிடப்பட்டுள்ளது. தற்போதைய கணிப்பின் படி இந்த வால் நட்சத்திர்ம் டிசம்பர் மாதத்தில் பூமிக்கு மிக நெருக்கமாக கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. பூமியில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொது மக்கள் இந்த வால் நட்சத்திரத்தை வெறும் கண்ணால் பார்க்க முடியும் என்பது இதன் கூடுதல் சிறப்பு. ஆனால் சென்னை வாசிகளுககு இந்த வாய்ப்பு மிகவும் குறைவு என்றே சொல்லப்படுகிறது. அதே போல டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு காரணமாக டெல்லி வாசிகளுக்கும் வால் நட்சத்திரத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனது துரதிருஷ்டம் என்றே சொல்ல வேண்டும். டிசம்பர் 10 முதல் 16 ஆம் தேதி வரை பூமிக்கு நெருக்கமாக கடக்கும் போது தெளிவாக பார்க்கலாம். உச்சமாக  இதை நாம் 13 ஆம் தேதி வடகிழக்கு திசையில் மிகத் தெளிவாக பார்க்கலாம். வாழ்வில் ஒரே முறை மட்டுமே கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி மக்கள் வால் நட்சத்திரத்தை கண்டு களிக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்