முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

நீண்ட தொலைவு பறக்கும் பறவை இனம் எது தெரியுமா?

Image Unavailable

றவைகளின் இடப்பெயர்ச்சி மனிதர்களுக்கு வியப்பையே அளித்து வந்திருக்கிறது.பல ஆயிரம் ஆண்டுகளிலிருந்து இன்றுவரை, இதற்கான துல்லியமான, மிகச் சரியான விடை கிடைக்கவில்லை. 

ஓர் ஆண்டில் 22,000 மைல்கள் வரை பறக்கக் கூடிய வடதுருவப் பகுதியில் உள்ள டெர்ன் பறவைகள் (arctic terns) மிக அதிக தூரம் பயணம் செய்யும் பறவை இனமாகும். இப்பறவைகள் வட துருவத்திலிருந்து தென் துருவப் பகுதிக்கு (the Antarctic region) இருபது வாரங்களில் நாளொன்றுக்கு 150 மைல் வேகத்தில் பறந்து செல்லக்கூடியவை ஆகும்.

பெரும்பாலான தரை வாழ் பறவைகள் தமது இடப்பெயர்வின் போது குறைந்த அளவே பயணம் செய்கின்றன. ஆனால் அமெரிக்க கோல்டன் ப்ளோவர் (American golden plover) என்னும் பறவை இனம், தங்கு தடையின்றி நீண்ட தூரம் பயணம் செய்யும்; இப்பறவை சுமார் 2400 மைல்கள் தடையின்றி பயணம் செய்யக்கூடியதாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்