எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பச்மாரி : மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரத்திலும் இதுவே நடந்துள்ளது என்று நான் நம்புகிறேன். இது பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தின் வேலை. எங்களிடம் இன்னும் அதிகமான ஆதாரங்கள் உள்ளன, விரைவில் அதை வெளிப்படுத்துவேன் என்று மத்திய பிரதேச மாநிலம் பச்மாரியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஜனநாயகமும் அரசியலமைப்பும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன என்று குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, தற்போதைய முக்கிய பிரச்சினை வாக்குத் திருட்டு என்றும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அதை மூடிமறைத்து நிறுவனமயமாக்குவதற்கான ஒரு அமைப்பு என்றும் தெரிவித்தார்.
மத்திய பிரதேச மாநிலம் பச்மாரியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “ ஹரியானாவில் வாக்குத் திருட்டு தெளிவாக செய்யப்பட்டுள்ளது. இருபத்தைந்து லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளன, எட்டு வாக்குகளில் ஒரு வாக்கு திருடப்பட்டுள்ளன. தரவுகளைப் பார்த்த பிறகு, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரத்திலும் இதுவே நடந்துள்ளது என்று நான் நம்புகிறேன். இது பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தின் வேலை. எங்களிடம் இன்னும் அதிகமான ஆதாரங்கள் உள்ளன, விரைவில் அதை வெளிப்படுத்துவேன்.
தற்போதைய முக்கிய பிரச்சினை வாக்குத் திருட்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அதை மூடிமறைத்து நிறுவனமயமாக்குவதற்கான ஒரு அமைப்பு. எங்களிடம் விரிவான தகவல்கள் உள்ளன. இதுவரை நாங்கள் மிகக் குறைவாகவே வெளிக்காட்டினோம், ஆனால் முக்கிய பிரச்சினை என்னவென்றால், ஜனநாயகம் மற்றும் அம்பேத்கரின் அரசியலமைப்பின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆகியோர் நேரடியாக கூட்டு சேர்ந்து இதைச் செய்கிறார்கள். இது நாட்டை, பாரத மாதாவை சேதப்படுத்துகிறது" என்று குற்றம் சாட்டினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


