எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'கணிதன்' இசை வெளியீட்டு விழா
'கணிதன்' இசை வெளியீட்டு விழா
வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் படம் 'கணிதன்'. அதர்வா, கேத்தரின் தெரசா நடித்துள்ள இப்படத்தை டி.என்.சந்தோஷ் இயக்கியுள்ளார். இவர் ஏ.ஆர். முருகதாஸின் மாணவர். படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை க்ரீன் பார்க் ஓட்டலில் நடந்தது. இசையை ஏ.ஆர் ரகுமான் வெளியிட ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் சிறப்பு விருந்தினர் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் இயக்குநர் எஸ் ஏ.சந்திரசேகரன் பேசும் போது " ஒரு படம் வெற்றியடையும் போது அது படத்தை இயக்கிய இயக்குநருக்கு வெற்றியை மட்டுமல்ல அவருடன் இருக்கும் உதவியாளர்களுக்கும் வாய்ப்பை, வாழ்க்கையையும் தேடித் தருகிறது. புதுமையாக கதை சொல்லும் இயக்குநர்களுக்காக தாணுசார் மாதிரி எத்தனையோ தயாரிப்பாளர்கள் வாய்ப்பு கொடுக்க தயாராகக் காத்திருக்கிறார்கள். " என்றார்.
இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் பேசும்போது " இது பத்திரிகையாளர் சம்பந்தப் பட்ட கதை. இதைத் தயாரிக்கும் தாணு சாரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.ரஜினி சாருக்கு சூப்பர்ஸ்டார் பட்டம் கொடுத்தவர் அவர். கடின உழைப்பாளி ராசியானவர். நான் 'துப்பாக்கி' படம் எடுத்த போது அதன் முதல் தோட்டாவாக இருந்தவர் அவர்தான். நான் 'கத்தி' படம் இயக்கிய போது நான் ஒரு கத்திதான் எடுத்தேன். ஆனால் ஊரில் யார் யாரோ 100 கத்திகள் எடுத்தார்கள். நான் படத்தில் பாம் வைத்தால் நிஜமாகவே தியேட்டரில் பாம் வைத்தார்கள்.அப்போது நான் செய்வது அறியாமல் தவித்த போது எனக்குத் துணை நின்றவர் தாணு சார்தான். அவர் தயாரிக்காத படத்துக்குக்கூட எனக்கு அவ்வளவு பக்க பலமாக இருந்தார்.சத்யம் திரையரங்கில் திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டம் நடந்தபோது படம் வெளிவருமா வராதா என்று நான் தவித்துக் குழம்பிய போது அவர் அங்குஅவர்கள் நடுவில் வந்து சொன்னார், படத்தை திரையிடுங்கள் எது நடந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன். என்ன பாதிப்பு வந்தாலும் நான் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்றார். அப்படிப்பட்டவர்தான் இந்த தாணு சார்.
என் உதவியாளர்கள் 'அரிமா நம்பி' ஆனந்த் சங்கர், 'கணிதன்' சந்தோஷுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். 'துப்பாக்கி' படத்தில் வேலை பார்த்த என் ஆறு உதவியாளர்களும் இப்போது படம் இயக்குகிறார்கள். தமிழ்த்திரையுலகில் 'கபாலி', 'தெறி' என்கிற இரண்டு பெரிய படங்களை எடுத்து வருகிறார். அந்தப் படத்தோடு என் உதவியாளர் இயக்கும் 'கணிதன்' படமும் தயாரிக்கிறார் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. 'கபாலி', 'தெறி' என்கிற இரண்டு பெரிய படங்களோடு அதற்கு எந்த அளவிலும் குறையில்லாமல் இந்தப் படத்தையும் நேசிப்பார் என்பது எனக்குத் தெரியும்.
'கணிதன்' இயக்கும் சந்தோஷ் நல்ல உழைப்பாளி, சுறுசுறுப்பானவர். நாயகன் அதர்வாவைப் எனக்குப் பிடிக்கும்.,காரணம் அவரது அப்பா முரளிசார் எனக்குப் பிடிக்கும்.,. தமிழ்ச் சினிமாவில் அதிகமான புதுமுக இயக்குநர்களுக்கு முதல் படம் கொடுத்த நாயகன் முரளிசார்தான். அவர். நமக்கு அதர்வாவையும் கொடுத்தவர் என்பதால் அவரைப் பிடிக்கும். அதே போலஅதர்வாவும் புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார். ஒரு கதாநாயகன் சிக்ஸ் பேக் வைத்தால் மட்டும் பெரிய கதாநாயகன் என்றில்லை. காலையில் 9 மணிக்குப் படப்பிடிப்புக்கு வந்தால் பெரிய உண்மையான நடிகர் என்று கூறமுடியாது.
காலை 7 மணிக்கே சீருடையுடன் பள்ளிக்குப் போகும் குழந்தைகளைப் பார்க்கிறோம். அவர்களை சின்சியரானவர்கள் என்று நாம் கூறுவதில்லை. நல்ல கதையைத் தேர்வு செய்து நடிப்பதுதான் திறமை. கதாநாயகன் 50 கதைகள் கேட்டால்தான் ஒரு நல்ல இயக்குநரை கண்டுபிடிக்கமுடியும்;அடையாளம் காணமுடியும்.நல்ல கதை கேட்டது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயமோ அதே போல் மோசமான கதை கேட்பதும் கொடுமையான விஷயம். அஜீத்சார் ,விஜய்சார் போல அதர்வாவும் புதுமுக இயக்குநருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
இதில் நடித்துள்ள கேத்தரின் தெரசா முன்னணி நாயகியாக வருவார். இசையமைத்திருக்கும் சிவமணியும் நானும் ஒரு முறை விமானத்தில் போனோம். அவர் கண்ணை மூடிக் கொண்டு இருந்தார். அட கவலையில்லாத மனிதர் என்று நினைத்தேன். சற்று நேரத்தில் என் காதில் ஹெட் போனை மாட்டிவிட்டு விமானத்தின் ஒலியை அடிப்படையாக வைத்து ஒரு ரிதம் போட்டுள்ளேன் கேளுங்கள் என்றார். கேட்டு விட்டு அசந்து விட்டேன்.
நான் வெளியிட ரகுமான் சார் பெற்றுக் கொள்ள வேண்டும். அதுவும் என் படத்துக்காக இருக்க வேண்டும் என்பது என் ஆசை. ஆஸ்கார் விருது வாங்கும் போது வெள்ளைக்காரர்கள் மத்தியில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்றார். அப்போது எனக்கு எல்லாப் புகழும் தமிழனுக்கே என்று தோன்றியது. சாப்பாடு எப்படி இருக்கும் என்பதற்குச் சாப்பிடவே வேண்டாம்.சமையல் கட்டிலிருந்து வரும் வாசனையிலேயே தெரியும். இந்த'கணிதன்' படமும் அப்படித்தான். எடிட்டிங், டீஸர், பாடல் நிலையிலேயே நன்றாகத் தெரிகிறது. நம்பிக்கை வருகிறது. இப்படம் வெற்றிப் படமாகி சந்தோஷ் சந்தோஷமாக இருக்க வாழ்த்துகிறேன்.'' இவ்வாறு முருகதாஸ் பேசினார்.
'தெறி'பட இயக்குநர் அட்லி பேசும் போது " இயக்குநர் சந்தோஷ் எனக்கு நீண்டநாள் நண்பர் அவரை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது. நான் சாதாரண ஆள் .என்னை ரகுமான் சார் இருக்கும் இந்த மேடையில் ஏற்றியவர் தாணுசார். அடுத்தவர்களை உயர்த்தி வைத்து அழகு பார்ப்பவர் அவர். ஒரு தயாரிப்பாளர் எப்படி இருக்கவேண்டும் என்றால் தாணுசார் போல் இருக்கவேண்டும் என்பேன். என் அப்பாவிடம் 100 ரூபாய் பேட்டால் கூட 10 கேள்வி கேட்பார். ஆனால் இவர் கோடிக்கணக்கில் தருவார்.தயாரிப்பாளர் என்றால் தாணுசார் போல்தான் இருக்கவேண்டும்'' என்றார்.
நாயகன் அதர்வா பேசும்போது'' ஒரு நாள் தாணு சார் சந்தோஷிடம் என்னைக் கதை கேட்கச் சொன்னார். சந்தோஷ் சொன்ன இந்தக் கதை எனக்குப் பிடித்து இருந்தது. ஆனால் சற்றுப் பயமாக இருந்தது. நம்மால் முடியுமா? ஏற்றுக் கொள்வார்களா? என்று பயமாக இருந்தது. சிறு வயதில் சிவமணிசாரின் டிரம்ஸ் வாசிப்பைக் கேட்டு நான் டிரம்ஸ் வாங்கி வாசிக்க முடியாமல் வீட்டில்என்னைக் கழுவிக் கழுவி ஊற்றினார்கள் ரகுமான் சார் ,ஏ.ஆர் முருகதாஸ்சார் இவர்கள் இருவருமே எனக்கு இன்ஸ்பிரேஷன் அவர்களைப் பார்த்து வளர்ந்தவன் நான்." என்றார்.
நாயகி கேத்தரின் தெரசா பேசும்போது "இது எனக்கு முக்கியமான விழா இது நான் ஒப்பந்தமான 2 வது படம். கதை கேட்டேன், பிடித்தது. ஒரு படத்துக்கு உணர்வுகளை வெளிப்படுத்த இசை முக்கியம். இதில் அந்த இசை நன்றாக வந்துள்ளது. இது கருத்துள்ள கமர்ஷியல் படம் . " என்றார்.
படத்தின் இயக்குநர் டி.என் .சந்தோஷ் பேசும்போது ,''என்னைக் கவர்ந்தவர்கள்,பாதித்தவர்கள் 4 பேர். ஒருவர் என் அப்பா நாராயணன். இப்போது அவர் இல்லை. இன்னொருவர் இயக்குநர் ஷங்கர் சார்,நாலு வயதில் அவரது ஜென்டில் மேன் பார்த்து வியந்தேன். இன்னும் ஒருவர் முருகதாஸ்சார் அவரிடம் உதவியாளராகி விட்டேன். மற்றொருவர் ரகுமான் சார். இவர் இசையில்தான் முதல் படம் இயக்குவது என்று ஆசைப்பட்டேன் அவர் ஆஸ்கார் விருது வாங்கியதும் அந்த ஆசையை விட்டு விட்டேன். கதை பண்ணுவது கஷ்டமில்லை. அதை நினைத்தபடி எடுப்பது சுலபமில்லை. தாணுசார் கேட்கிறதை எல்லாம் கொடுத்து ஊக்கம் கொடுத்தார். 'துப்பாக்கி' யைப் போலவே இதற்கும் செலவழித்துள்ளார்''.என்றார்.
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரகுமான் பேசும்போது, " இது மாதிரி நிகழ்ச்சிகளுக்குப் போகும் போதும் உங்களைப் பார்க்கும்போது குடும்பத்தினருடன் ஒன்றாக இருப்பது போல உணர்கிறேன். சற்று இடைவெளி விட்டு ஒவ்வொரு நிகழ்ச்சி போகும் போதும் முகங்கள் மாறுகின்றன. அதற்குள் புதிய ஜீனியஸ்கள் வந்து விடுகிறார்கள். டிரம்ஸ் சிவமணிக்கு இந்தப் படம் இசை எல்லாம் ஒரு அடிப்படையான விஷயம்தான். அவருக்குள் இருக்கும் தங்கச்சுரங்கம் இனிமேல்தான் வெளிவரப் போகிறது.''என்றார்.
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு நன்றியுரை ஆற்றும் போது,'' பத்திரிகையாளர் நண்பர்களே, ஊடக நண்பர்களே படத்தின் விளம்பரங்களில் 'உங்கள் குரலாய் கணிதன், உங்களுக்காக கணிதன் 'என்று போடச் சொன்னேன். உங்களுக்காக 'கணிதன்' குரல் கொடுப்பான். நீங்கள் கரம் கொடுப்பீர்''என்றார்.
இவ்விழாவில் டிரம்ஸ் சிவமணியின் குருநாதர்களான இசை மேதைகள் விக்கு விநாயக்ராம் ,காரைக்குடி மணி ஆகியோர் பங்கேற்றனர். பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பாடலாசிரியர் மதன்கார்க்கி,டிரம்ஸ் சிவமணி,வில்லன் நடிகர் தருண் அரோரா ஆகியோரும் பங்கேற்றுப் பேசினர்.முன்னதாக டிரம்ஸ் சிவமணியின் கச்சேரி நடந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
தமிழ்நாட்டில் வரும் 16-ம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்கும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
12 Oct 2025சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 16 -ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
இஸ்ரேலை சேர்ந்த பிணைக்கைதிகள் 20 பேரை விடுவிக்க ஹமாஸ் முடிவு
12 Oct 2025காசா : இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான உடன்படிக்கையின் படி முதல் கட்டமாக இஸ்ரேலை சேர்ந்த சுமார் 20 பிணைக் கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
-
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: நீதிமன்றத்தை நாட போராட்டக்குழு முடிவு
12 Oct 2025காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஏகனாபுரம் கிராமத்தில் கிராம சபைக் கூட்டத்தில் 15-வது முறையாக பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர்.
-
நெருங்கும் தீபாவளி பண்டிகை: தமிழகத்தில் ஜவுளிக்கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்
12 Oct 2025சென்னை : நெருங்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் உள்ள ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
-
இந்து மகாசபா தலைவி கொலை வழக்கில் கைது
12 Oct 2025லக்னோ : இந்து மகாசபா தலைவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர்: மூத்த வழக்கறிஞர் பராசரனுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் புகழாரம்
12 Oct 2025சென்னை : சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் பராசரன் என சுப்ரீம் கோர்ட்நீதிபதிகள் புகழாரம் சூட்டினர்.
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி, மங்களூருக்கு சிறப்பு ரயில்
12 Oct 2025நெல்லை : தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
-
ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 2-வது நாளாக தடை
12 Oct 2025ஒகேனக்கல் : வடகிழக்கு பருவமழை தொடங்குவதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
-
பள்ளிகளில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் காலை உணவு திட்டம் குழந்தைகள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
12 Oct 2025சென்னை : தமிழகம் முழுவதும் பள்ளிகளில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு திட்டம் தினமும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறத
-
உபரிநீர் வரத்து அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் 115.18 அடியை எட்டியது
12 Oct 2025மேட்டூர் : கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.
-
இந்தியா-ஆப்கான் கூட்டறிக்கை: ஆப்கன் தூதரிடம் பாக்., கண்டனம்
12 Oct 2025இஸ்லாமாபாத் : இந்தியா வந்துள்ள ஆப்கன் வெளியுறவு அமைச்சர் முட்டாகி, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார்.
-
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம்
12 Oct 2025மதுரை : தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
-
இஸ்ரேல்-காசா போர் நிறுத்தம்: லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் மீண்டும் தாயகம் திரும்புகின்றனர்
12 Oct 2025காசா : காசாவில் இருந்து வெளியேறிய லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் ஆர்வமுடன் தாயகம் திரும்பி வருகின்றனர்.
-
ராமேசுவரம் மீனவர்கள் 2-வது நாளாக தொடர் போராட்டம்
12 Oct 2025ராமேசுவரம் : இலங்கை சிறையில் தவிக்கும் மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 2-வது நாளாக நேற்றும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
3 கத்தார் தூதர்கள் விபத்தில் பலி
12 Oct 2025எகிப்து : எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில் கத்தார் நாட்டைச் சேர்ந்த மூன்று தூதர்கள் உயிரிழந்தனர்.
-
தீபாவளி பண்டிகை, சட்டமன்ற தேர்தல்: சொந்த ஊர் செல்ல தயாராகும் பீகார் மாநில தொழிலாளர்கள்
12 Oct 2025திருப்பூர் : வருகிற 20-ந்தேதி தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பூரில் பணிபுரியும் பீகார் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தம
-
நயினார் நாகேந்திரன் பிரசார வாகனம் மதுரை வந்தது
12 Oct 2025மதுரை : பா.ஜ.க.
-
58 பாக்., வீரர்களை கொன்று 25 ராணுவ முகாம்களை கைப்பற்றியது ஆப்கான்
12 Oct 2025காபூல் : தலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா முஜாஹித் வெளியிட்ட அறிவிப்பில், இந்த தாக்குதலில் 58 பாகிஸ்தான் வீரர்களைக் கொன்றுவிட்டதாகவும், 25 பாகிஸ்தான் இராணுவ முகாம்
-
அமெரிக்கா: துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி
12 Oct 2025மிசிசிப்பி : அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள பள்ளியில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
-
திண்டுக்கல் தெற்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் கைது
12 Oct 2025திண்டுக்கல் : த.வெ.க. திண்டுக்கல் தெற்கு மாவட்டச் செயலர் நிர்மல் குமாரை சாணார்பட்டி போலீஸார் கைது செய்தனர்.
-
100 சதவீத வரிவிதிப்பு நடவடிக்கை: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை
12 Oct 2025பெய்ஜிங் : அமெரிக்க அதிபர் ட்ரம்பின் 100 சதவீதம் வரி அச்சுறுத்தலுக்கு பதிலளித்துள்ள சீனா, ‘நாங்கள் ஒரு வரிப் போரை விரும்பவில்லை, ஆனால் நாங்கள் அதைப் பற்றி பயப்படவும் இல
-
பார்வையாளர்கள் பார்க்காததை வழங்குவோம்: அல்லு அர்ஜுனின் படம் குறித்து இயக்குனர் அட்லி புதிய தகவல்
12 Oct 2025பெங்களூரு : அல்லு அர்ஜுன் படத்தில் பார்வையாளர்கள் பார்க்காததை வழங்கவிருப்பதாக இயக்குநர் அட்லி உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
22 குழந்தைகள் பலியான விவகாரம்: விதிமீறலில் ஈடுபட்ட மருந்து நிறுவனம்
12 Oct 2025புதுடெல்லி : காஞ்சீபுரத்தை சேர்ந்த சிரேசன் பார்மா என்ற அந்த நிறுவனத்தில் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு கழக அதிகாரிகள் சமீபத்தில் ஆய்வு செய்ததில், அந்த நிறுவனம் பல்வே
-
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: தேஜஸ்வி யாதவ் மீண்டும் வாக்குறுதி
12 Oct 2025பாட்னா : பீகாரில் அரசு வேலை இல்லா குடும்பங்களில், குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை கிடைக்கும். நவ.
-
மேற்குவங்கத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி வன்கொடுமை - மூவர் கைது
12 Oct 2025கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் ஒடிசாவைச் சேர்ந்த மாணவி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைத