எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் காதல்... கேரள அழகி அர்ச்சனா ரவி
தமிழ் சினிமாவில் காதல்... கேரள அழகி அர்ச்சனா ரவி
"தமிழ் சினிமாவில் காதல் என்ற வார்த்தைக்கு உயிர் கொடுக்கும் ஒரு இயக்குனர் கௌதம் மேனன்" என்கிறார் கேரள அழகி அர்ச்சனா ரவி
கேரளாவில் பிறந்து தமிழ் நாட்டுக்கு வந்து திரை உலகில் கோலோச்சும் நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டே தான் வருகிறது. நயன்தாராவில் ஆரம்பித்து தற்போது மலர்ந்து வரும் கதாநாயகிகளான மஞ்சிமா மோகன், மடோனா செபாஸ்டியன் வரை பெரும்பாலானோர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர்கள் தான். தற்போது அந்த வரிசையில் இணைய தயாராகி வருகிறார் மிஸ் குயின் (கேரளா) பட்டம் பெற்ற அர்ச்சனா ரவி. 19 வயதான அர்ச்சனா ரவிக்கு கலகலவென பேசுவதும், நடனமும் தான் மிகவும் பிடித்தமான செயல்கள். "எனக்கு பேசுவது என்றால் ரொம்பவும் பிடிக்கும். அதன் காரணமாகவோ என்னவோ, நான் எனது பள்ளி பருவத்திலேயே தொகுப்பாளராக உருவெடுத்துவிட்டேன். அதன் பின் மாடலிங் துறையில் நுழைந்து தற்போது சில விளம்பர படங்களில் நடித்து வருகிறேன். இந்த மாடலிங் துறையில் ஒவ்வொரு நாளும் புதுபுது அனுபவங்களை நான் கற்று கொண்டு வருகிறேன்" என்று கூறி மெல்லிய புன்னகையுடன் துவங்குகிறார் அர்ச்சனா.
இவ்வளவு இளம் வயதிலேயே மிஸ் குயின் (கேரளா) என்னும் பட்டத்தை தட்டி சென்ற பெருமை அர்ச்சனாவையே சாரும். அதுமட்டுமின்றி தென் இந்தியாவிற்கான அழகி போட்டியிலும், சிறந்த அழகிய முகத்திற்கான போட்டியிலும், சிறந்த உடல் அழகி மற்றும் 2016 ஆம் ஆண்டிற்கான மிஸ் பெர்சனாலட்டி போட்டியிலும் இரண்டாம் இடத்தை பிடித்திருப்பவர் அர்ச்சனா ரவி என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பல விருதுகளை தனது சொத்துக்களாக வாங்கி குவித்துள்ள அர்ச்சனாவை பொறுத்தவரை நடிப்பு என்பது இறைவன் கொடுத்த வரம். "நடிப்பு என்பது ஒரு கலை. அந்த கலையை நான் எங்கும் சென்றும் பயிலவில்லை. மாறாக என் மீது முழு நம்பிக்கை வைத்து தான் கேமரா முன் தோன்றுவேன். நடிப்பு மட்டும் தான் என்னுடைய மிக பெரிய கனவாக பல காலமாக இருந்து வருகிறது. எனக்கு சில பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தாலும், சரியான கதை களத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்" என்று நம்பிகையுடன் கூறுகிறார் அர்ச்சனா. ஜெர்மனியிலும், சீனாவிலும் நடைப்பெற உள்ள நம்பர் 1 மாடல் போட்டிக்கு அர்ச்சனா தயாராகி வருவது மேலும் சிறப்பு.
பரதநாட்டியத்தில் தேர்ச்சி பெற்று உள்ள அர்ச்சனாவிற்கு, இயக்குனர் கௌதம் மேனனின் திரைப்படங்கள் மீது தனி மரியாதை உண்டு. "தமிழ் சினிமாவில் எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு இயக்குனர், காதல் என்ற வார்த்தைக்கு உயிர் கொடுக்கும் கௌதம் மேனன் தான். காதலை மையமாக கொண்டு அவர் உருவாக்கியுள்ள படங்கள் யாவும் மிக எதார்த்தமாகவும், நெஞ்சை உரசி செல்ல கூடியதாகவும் இருக்கும்" என்கிறார் அர்ச்சனா. அதுமட்டுமில்லாமல் நடிகர் தனுஷின் நடிப்பு நுணுக்கங்கள் அவரை பல தருணங்களில் ஆச்சரியப்பட செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. "நான் தனுஷின் மிகப்பெரிய ரசிகை. ஒவ்வொரு படங்களிலும் ஒவ்வொரு கதாபாத்திரங்கள் என கலைக்கே புது அர்த்தத்தை அவர் ஏற்படுத்தி வருகிறார். உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் அவரின் சில காட்சிகளை பார்த்து தான் நான் என்னுடைய நடிக்கும் திறனை வளர்த்து வருகிறேன்" என்று புன்னகையுடன் கூறுகிறார் அர்ச்சனா. "எந்த ஒரு கதாப்பாத்திரமாய் இருந்தாலும் சரி. திரைப்படம் முடிந்து ரசிகர்கள் வீட்டுக்கு சென்றாலும் அந்த கதாப்பாத்திரமானது அவர்களின் நினைவில் இருந்து அழியக் கூடாது. அப்படிப்பட்ட வேடங்களில் நடிக்க தான் நான் காத்துக் கொண்டிருக்கிறேன். அதை தவிர நாட்டியம் ஆடும் பெண்மணியாகவும், காதல் கதைகளில் மனதை வருடிச் செல்லும் கதாப்பாத்திரமாகவும் நடிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கனவு வேடங்கள்." என்கிறார் அர்ச்சனா.
தனது அம்மாவை முன்மாதிரியாக கருதும் அர்ச்சனா கூறுகையில், "ஒவ்வொரு முறையும் நான் தடுமாறி கீழே விழும்பொழுது, என்னை தாங்கி பிடிக்கும் என் அம்மா தான் எனக்கு பெஸ்ட்" என்று கூறி விடை பெறுகிறார் அழகும் அறிவும் ஒருங்கே இணைந்த அர்ச்சனா ரவி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 14 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-09-2025.
20 Sep 2025 -
இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்கா செல்கிறார் பியூஷ் கோயல்
20 Sep 2025புதுடெல்லி, இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அடுத்த சில நாட்களில் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா செல்ல
-
தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை..?
20 Sep 2025டெல்லி, தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை என்ற விவரம் வெளியாகியுள்ளது.
-
தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
20 Sep 2025சென்னை, தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதி உதவி வழங்கினார்.
-
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா 23-ம் தேதி தொடக்கம்
20 Sep 2025திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது.
-
மும்பையில் இருந்து சென்ற தாய்லாந்து சென்ற விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025சென்னை, தாய்லாந்துக்கு சென்று கொண்டு இருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
-
ஆதார் கார்டில் திருத்தம் செய்ய கட்டணம் மேலும் அதிகரிப்பு..?
20 Sep 2025சென்னை, ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்கான கட்டணம் உயர்வு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
-
எழுதி கொடுத்ததை விஜய் படிக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்
20 Sep 2025சென்னை, விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். அதில் அவர் எழுதி கொடுத்ததை படிக்கிறார் என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு மீண்டும் ஒப்படைக்க சென்னை மெட்ரோ அலுவலகம் திறப்பு
20 Sep 2025சென்னை, பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு பொருட்களை மீண்டும் ஒப்படைக்க சென்னையில் மெட்ரோ அலுவலகம் திறக்கப்பட்டது.
-
இந்திய ராணுவத்தில் பள்ளி மாணவர்கள் சேர வேண்டும்: முப்படை தலைமை தளபதி அழைப்பு
20 Sep 2025ராஞ்சி, பள்ளி மாணவர்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் அழைப்பு விடுத்துள்ளார்.
-
மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
20 Sep 2025மும்பை, மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025புதுடெல்லி, டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
-
சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிப்பு
20 Sep 2025சென்னை, சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்கா எச்.1 பி விசா விவகாரம்: பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்
20 Sep 2025புதுடெல்லி, எச்.1 பி விசா விவகாரத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
கரடி நடமாட்டம் எதிரொலி: பழைய குற்றாலத்தில் குளிப்பதற்கான நேரம் குறைப்பு
20 Sep 2025தென்காசி, கரடி நடமாட்டம் அதிகரிப்பால் பழைய குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
-
நைஜீரியாவில் தீ விபத்து: 10 பேர் பலி
20 Sep 2025அபுஜா, நைஜீரியாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
மாணவர்களின் விவரங்களை வரும் 20-ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, மாணவர்களின் விவரங்களை விரைவில் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
மைசூரில் தசராவை தொடங்கி வைக்க எழுத்தாளருக்கு எதிரான மனு தள்ளுபடி
20 Sep 2025புதுடெல்லி, மைசூரு தசராவை தொடங்கி வைக்க எழுத்தாளர் பானு முஷ்டாக் அழைக்கப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
அமெரிக்கா எச்.1 பி விசா விவகாரம்: பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்
20 Sep 2025புதுடெல்லி, எச்.1 பி விசா விவகாரத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டம்
20 Sep 2025வாஷிங்டன், ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
-
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
20 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மாறுவதற்கான இறுதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நுழைவுநிலை பயிற்சி தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நுழைவு நிலைப் பயிற்சியை முதல்வர் மு. க. ஸ்டாலின் நேற்று (செப். 20) தொடக்கி வைத்தார்.
-
பள்ளிகளில் சாதி உணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனம் ஏற்படாத வகையில் மாணவர்களை பாதுகாக்க வேண்டும்: சென்னையில் நடைபெற்ற மும்பெரும் விழாவில் ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, எதையும் கூகுள், செய்யறிவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற மெத்தனத்துடன் மாணவர்கள் இருக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
காசாவில் தீவிரமடையும் போர்: இஸ்ரேலுக்கு மேலும் ஆயுதங்களை வழங்க ட்ரம்ப் நிர்வாகம் ஒப்புதல்..!
20 Sep 2025வாஷிங்டன், காசாவில் தீவிரமடையும் போரை தொடர்ந்து இஸ்ரேலுக்கு கோடிக்கணக்கான மதிப்பிலான ஆயுதங்களை ட்ரம்ப் நிர்வாகம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
-
ஜி.எஸ்.டி. மறுசீரமைப்பால் 375 பொருட்களின் விலை மேலும் குறைந்துள்ளது: நிர்மலா சீதாராமன்
20 Sep 2025கோவில்பட்டி, ஜி.எஸ்.டி. புரட்சியால் 375 பொருட்களுக்கு விலை குறைந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும், ஜி.எஸ்.டி.