முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

காய்ச்சலுக்கு அற்புதமான சித்த மருத்துவ குறிப்புக்கள்

Image Unavailable

 

 1. காய்ச்சல் தீர ;--வேப்பிலையை வறுத்து சூடோடு தலைக்கு வைத்து தூங்கவும்,நிம்மதியான தூக்கமும் வரும்.
 2. மலேரியா காய்ச்சல் குணமாக ;-- மிளகு,சீரகம் சேர்த்து சாப்பிட்டு வரவும்.
 3. பித்த காய்ச்சல் தீர ;--சீதேவி செங்கழுநீர் சமூலமாகக் குடிநீர் செய்து சாப்பிடலாம்.
 4. எப்படிப்பட்ட காய்ச்சலும்  தீர ;-- கோரைக்  கிழங்கு கஷாயம் குடித்தால் நல்லது.
 5. கடுங்காய்ச்சல் குணமாக ;--கோரைக்கிழங்கை கழுவி சுத்தம் செய்து நீர் விட்டு காய்ச்சி குடிக்கலாம்.
 6. எலும்பு காய்ச்சல் தீர ;--நெல்லிக்காய் லேகியம்  சிறு உருண்டையை காலை மாலை குடிக்க சுரம் நீங்கும்.
 7. காய்ச்சல் சரியாக;--நார்த்தங்காய் செடி இலைகளை கஷாயம் செய்து குடிக்கலாம்.
 8. சுரம் நீங்க ;--வெங்காய சாறு அரை அவுன்ஸ் காலை மாலை குடிக்க சுரம் நீங்கும்.
 9. அம்மை காய்ச்சல் தீர ;--அகத்தி மரப்பட்டை யை கஷாயம் செய்து குடிக்க அம்மை காய்ச்சல் தீரும்.
 10. சளி காய்ச்சல் தீர ;--ஓமவல்லி இலை காம்பு கஷாயம் செய்து குடிக்க சளி காய்ச்சல் தீரும்.
 11. சளி,காய்ச்சல் குணமாக ;--ஆடாதோடா இலையை கஷாயம் செய்து சிறிதளவு தேன் கலந்து குடிக்க சளி,காய்ச்சல் குணமாகும்.
 12. தாகசிரம் நீங்க ;-- கோரைக்கிழங்கு,சந்தனம்,வெட்டிவேர்,பற்பாடகம்,பிரமட்டை ஆகியவற்றை போட்டு கஷாயம் செய்து குடிக்கலாம்.
 13. சன்னி இழுப்பு ;--சங்கிலை,வேப்பிலையை  சம அளவு போட்டு கஷாயம் செய்து குடிக்க இழுப்பு வராமல் தடுக்கலாம்.
 14. வாத காய்ச்சல் குணமாக ;-- அவுரி இலை,சீரகம் மிளகு சேர்த்து அரைத்து தண்ணீரில் காய்ச்சி குடிக்கலாம்.
 15. சுரவேகத்தில் காணும் உள்ளங்கால்,கை எரிச்சல் தீர ;--இன்புறா இலை சாறு தடவலாம்.
 16. இருமல்,சளி,காய்ச்சல் தீர ;--ஓமவல்லி இலை காம்பு கஷாயம் செய்து குடிக்கலாம்.
 17. இடைவிடாத காய்ச்சல் தீர ;--பீச்சங்கு இலை சாறு 10 மில்லி சாப்பிட்டு வரலாம்.
 18. தாகம் மிகுந்த சுரம் தீர ;--கானாவாழை சமூலத்துடன் மிளகு,சீரகம் கஷாயம் செய்து குடிக்கலாம்.
 19. சீதனக் காய்ச்சல் குணமாக ;--தூதுவளை கண்டங்கத்திரி  பற்பாடகம்,விஸ்ணுகிரந்தி ஆகியவற்றை கஷாயம் காய்ச்சி 10மில்லி அளவு 3 வேலை குடித்து வரலாம்.
 20. நச்சு காய்ச்சல் போக ;--பற்பாடகம்,நீலவேம்பு,சுக்கு,சீரகம்,அதிமதுரம்   கஷாயம் குடிக்கலாம்.
 21. டைபாய்டு காய்ச்சல் தீர ;--புன்னைப்பூவை உலர்த்தி பொடி செய்து ஒரு சிட்டிகை காலை மாலை கொடுக்கலாம்.
 22. குளிர் காய்ச்சல் தீர ;--முருங்கைபட்டையை அவித்து சாறு எடுத்து ரசமாக்கி சாப்பிடலாம்.
 23. பித்த சுரம் தீர ;--விளாமர இலை கஷாயம் சாப்பிடலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!