முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் இயக்கத்தில் `தேநீர் விடுதி'

சனிக்கிழமை, 19 பெப்ரவரி 2011      சினிமா

 

சென்னை, பிப்,20

பூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் எஸ்.எஸ்.குமரன்....

சூச்சு சூச்சு மாரி...யில் ஆரம்பித்து களவாணி படத்தில் வரும் டம்ம டம்மா... வரைக்கும் இவரது இசைக்கு மயங்காத செவிகளே இல்லை எனலாம். அந்தளவுக்கு அறிமுகமான குறுகிய காலத்திலேயே அனைவரையும் கவர்ந்த எஸ்.எஸ்.குமரன் தனது அடுத்து பரிமாணத்தையும் வெளிப்படுத்துகிற விதத்தில் திரைப்பட இயக்குனராகிவிட்டார்.

பீக்காக் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.அனுஷ்கா தேவி தயாரிப்பில் எஸ்.எஸ்.குமரன் இயக்கும் புதிய படம் தேநீர் விடுதி. ஆதித், ரேஷ்மி, கொடுமுடி, ஸ்வேதா, பிரபாகர், பெரிய கருப்ப தேவர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

பந்தல் நடும் தொழில் செய்யும் பையனுக்கும், பல சரக்கு கடை நடத்தும் பெண்ணுக்கும் காதல் வருகிறது. கடைக்கு எதிரில் இருக்கிற டீக்கடையில் இருந்துதான் காதலுக்கே பேஸ்மென்ட் போடுகிறார் ஹீரோ. இப்போது புரிந்திருக்குமே, படத்தின் தலைப்பில் தேநீர் விடுதி வந்தது எப்படி என்று!

தமிழ் சினிமா வரலாற்றில் இப்படி ஒரு ஐ லவ் யூவை யாருமே சொல்லியிருக்க முடியாது. அப்படி ஒரு காட்சி வருகிறது படத்தில். தன் காதலை ஹீரோ சொல்ல மாட்டார் ஹீரோயினிடம். அதே மாதிரி ஹீரோயினும் தன் காதலை சொல்ல மாட்டார். ஆனால் இருவருமே ஒரு கட்டத்தில் ஐ லவ் யூ சொல்லிக் கொள்வார்கள். எப்படி என்பதை யாருமே யூகிக்க முடியாதபடி காட்சி படுத்தியிருக்கிறார் எஸ்.எஸ்.குமரன்.

இசையமைப்பாளர் டைரக்ட் செய்த படம். குறைந்தது எட்டு பாடலாவது இருக்கும் என்று யாரும் நினைத்து விட முடியாது. படத்தில் இடம் பெறுவது மொத்தம் மூன்றே பாடல்கள்தான். அதுவும் ஒரு பல்லவி, ஒரு சரணத்தோடு முடிந்துவிடும் அந்த மூன்று பாடல்களும், ஏன் இப்படி என்று இயக்குனரிடம் கேட்டால், கதைக்காகதான் பாடல்களே தவிர, பாடல்களுக்காக கதை இல்லை. இந்த கதைக்கு இவ்வளவுதான் தேவைப்பட்டது. ரசிகர்கள் ஒரு பாடலுக்கு எழுந்து தம் அடிக்க போய்விட்டால், படத்தின் முக்கியமான திருப்பங்களை மிஸ் பண்ண வேண்டி வரும். அதாவது பாடல்கள் அத்தனையும் கதையோடு பின்னி பிணைந்தவை என்கிறார் எஸ்.எஸ்.குமரன்.

ஒளிப்பதிவு - மணவாளன், கலை - ஸ்ரீ, எடிட்டிங்-பி.எஸ்.மகேந்திரன், தயாரிப்பு எஸ்.அனுஷா தேவி, எழுத்து, இசை, இயக்கம் எஸ்.எஸ்.குமரன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்