முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சசிகலாநடராஜன் மற்றும் உறவினர்கள் திருச்சிபோலீசார் மீண்டும் கைது செய்தனர்

சனிக்கிழமை, 3 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

திருச்சி. மார்ச்.- 3 - புதிய பார்வை ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான முன்னாள் அரசு அதிகாரி நடராஜன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடு இடிப்பு சம்பந்தமான வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேபோன்று சசிகலாவின் நெருங்கிய உறவினரான ராவணன் பல்வேறு நபர்களிடம் பணமோசடி செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அதேபோன்று சசிகலாவின் உடன்பிறந்த சகோதரர் திவாகரன் ஒருபெண்ணின் வீட்டை இடித்த வழக்கில் திருவாரூர் மாவட்டம் nullnullநீடாமங்கலம் போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திருச்சி தில்லைநகரை சேர்ந்தவர் நடராஜன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு தஞ்சையைசேர்ந்த நிலபுரோக்கர் சரண் என்பவர் அறிமுகம் ஆனார். அந்த சரண் தொழில் அதிபர் வரதராஜனிடம் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு சொந்தமான நிலம் திருச்சி கொட்டப்பட்டில் 7 ஏக்கர் இருப்பதாவும், அந்த இடம் தொழில் செய்ய நல்ல இடம் என்று கூறியிருக்கிறார். அதைத்தொடர்ந்த அந்த கொட்டப்பட்டு இடத்திற்கு ரூ.1.65 கோடி தர பேரம் பேசப்பட்டது. வரதராஜன் புரோக்கர் சரண் மூலம் நிலத்திற்குரிய பணத்தை கொடுத்தாராம். ஆனால் பேசியபடி நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுக்க வில்லை. வாக்கிய பணத்தையும் திருப்பி கொடுக்க வில்லையாம். இதுகுறித்து நடராஜனிடம் கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. அதாவது சசிகலா கணவர் நடராஜன் அவர்களது உறவினர்களான சுரேஷ், செல்லதுரை, சரண், குமார், அனந்தகிருஷ்ணன், சுந்தரவேலன் ஆகிய  7 பேர்களும் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்ததாக  தொழில் அதிபர் வரதராஜன் திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இந்த 7 பேரில் சசிகலாவின் உறவினர்களான செல்லதுரை, சரண், அனந்த கிருஷ்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்