முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சித்தா மருத்துவ கல்லூரியில் வகுப்புகளை தொடங்க தீர்ப்பு

திங்கட்கிழமை, 12 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.13 -​ பாளையங்கோட்டையில் அரசு சித்தா மருத்துவ கல்லூரியும், நாகர்கோவில் கோட்டாறில் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியும் உள்ளது. இந்த 2 மருத்துவ கல்லூரிகளும் மிகவும் பழமை வாய்ந்தது. இரு கல்லூரிகளிலும் போதுமான ஆசிரியர்கள், உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்று கூறி மத்திய சுகாதார துறையின் கீழ் உள்ள இந்திய மருத்துவ முறை தேசிய கவுன்சில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு அனுமதி மறுத்தது. 

மத்திய அரசின் இந்த குழுவை எதிர்த்து தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீnullதிபதி பால் வசந்தகுமார் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடத்த அனுமதி வழங்கினார். மீண்டும் இந்த இரு கல்லூரிகளிலும் இந்திய மருத்துவ முறை தேசிய கவுன்சில் ஆய்வு நடத்தி மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று நீnullதிபதி உத்தரவிட்டார். 

இதன்படி மாணவர் சேர்க்கை நடைபெற்றது. ஆனால் மத்திய அரசு மீண்டும் ஆய்வு நடத்தி குறை பாடுகள் களையப் பட வில்லை என்று காரணம் காட்டி அனுமதியை மறுத்துவிட்டது. இதனால் மாணவர் சேர்க்கை நடந்தும் வகுப்புகள் தொடங்கப்படாத நிலை ஏற்பட்டது. 

வகுப்புகளை தொடங்க கோரி மாண வர்கள் தொடர் போராட் டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே இரு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் அருள் செல்வன், சாந்தி, அனிதா உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீnullதிபதி வி.ராம சுப்பிரமணியம் விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கினார். கல்லூரியில் காணப்பட்ட குறைபாடுகளை தமிழக அரசு நிவர்த்தி செய்த பிறகும் மத்திய அரசு அனுமதி மறுத்தது தவறு. எனவே மத்திய அரசு உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மாணவர்களுக்கான வகுப்புகளை 2 வாரத்தில் தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்