முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தினேஷ் திரிவேதி நீக்கப்படுகிறார்: பிரதமர் சூசகம்

வெள்ளிக்கிழமை, 16 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,மார்ச்.16 - மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்று பிரதமர் மன்மோகன் சிங் சூசகமாக தெரிவித்துள்ளார். மத்திய ரயில்வே அமைச்சராக தினேஷ் திரிவேதி இருக்கிறார். இவர் நேற்றுமுன்தினம் 2012-13-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை லோக்சபையில் தாக்கல் செய்தார். 60 ஆயிரத்து 100 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் ரயில் பயணிகள் கட்டணத்தையும் பிளாட்பாரம் கட்டணத்தையும் உயர்த்தி உள்ளார். இதற்கு அமைச்சர் திரிவேதி கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளித்த திரிவேதி, எனக்கு பதவி, கட்சியை காட்டிலும் நாடுதான் முக்கியம் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, எங்களை கேட்காமல் பயணிகள் கட்டணத்தை உயர்த்திய திரிவேதியை பதவியில் இருந்து நீக்கக்கோருவோம் என்றும் கட்டணத்தை உயர்த்த விடமாட்டோம் என்றும் மம்தா சபதம் ஏற்றுள்ளார். திரிணாமூல் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளதையொட்டி தேவைப்பட்டால் திரிவேதியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்று பிரதமர் மன்மோகன் சிங் சூசகமாக தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்