முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் ஷாரூஹ்கான் கைது: அமெரிக்கா விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2012      சினிமா
Image Unavailable

 

வாஷிங்டன்,ஏப்.15 - பிரபல இந்தி நடிகர் சாரூஹ் கான் மீண்டும் கைது செய்யப்பட்டதில் எந்தவித உள்நோக்கமோ அல்லது இனப்பாகுபாடோ இல்லை என்று அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. பிரபல இந்தி நடிகர் சாரூஹ் கான் அடிக்கடி அமெரிக்காவுக்கு பல்வேறு காரணங்கள் சம்பந்தமாக சென்று வருகிறார். கடந்த 2009-ம் ஆண்டு சாரூஹ்கான் அமெரிக்காவுக்கு சென்றார். அப்போது அவர் நியூ ஜெர்சி நகர விமான நிலையத்தில் இறங்கியபோது அவரை அமெரிக்க நாட்டு குடியுரிமை அதிகாரிகள் பல மணி நேரம் பிடித்து வைத்திருந்தனர். இதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அரசும் கண்டனம் தெரிவித்தது. இந்தநிலையில் சமீபத்தில் சாரூஹ் கான் அமெரிக்காவுக்கு சென்றார். அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் சொற்பொழிவு ஆற்றுவதற்காக ஒரு தனி விமானத்தில் அவர் சென்றார். அவருடன் நித அம்பானியும் சென்றார். சாரூக்ஹான்,நியூயார்க் நகர் விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் அவரை அமெரிக்க நாட்டு குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வைத்திருந்தனர். சாரூஹ் கான் அமெரிக்க அதிகாரிகளால் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டிருப்பதற்கு இந்தியாவில் பல தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இந்தநிலையில் சாரூஹ்கான் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை தெரிவித்துள்ளது. சாரூஹ்கான் கைது செய்யப்பட்டது எந்தவித உள்நோக்கமும் இல்லை.இனம். மத காரணமும் இல்லை. அமெரிக்க விதிமுறைகளின்படி பயணம் செய்யாததால்தான் அவர் கைது செய்யப்பட்டார். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு வருபவர்கள் முதலில் புதுடெல்லியில் உள்ள அமெரிக்க தூதகரத்திற்கு தாங்கள் யார், பயணத்திட்டம் என்ன என்பதை தெரிவிக்க வேண்டும். ஆனால் சாரூஹ்கான் அவ்வாறு தெரிவிக்கவில்லை. இந்தியாவில் இருந்தும் வேறுநாடுகளில் இருந்தும் ஏராளமான முஸ்லீம் பெருமக்கள் அமெரிக்காவுக்கு வந்து செல்கிறார்கள். அவர்கள் முறைப்படி பயணம் செய்கிறார்கள். அதனால் அவர்களில் யாரும் கைது செய்யப்படவில்லை. சாரூஹ்கான் அவ்வாறு பயணம் செய்யாததால்தான் கைது செய்யப்பட்டார் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர் வாஷிங்டன்னில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!