முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கிகள் தங்கள் பணிகளை இரட்டிப்பாக்க வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 27 ஏப்ரல் 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, ஏப்.28 - தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக்க வங்கிகள் தங்கள் பணிகளை இரட்டிப்பாக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவின் ஓவர்சீஸ் வங்கியின் பிளாட்டினம் விழாவில் கலந்து கொண்டு முதல்வர் பேசியதாவது:-

இந்திய ஓவர்ஸ் சீஸ் வங்கியின் பிளாட்டினம் விழா கொண்டாட்டங்களில் பங்குபெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த டிசம்பரில் வங்கியின் நிர்வாக இயக்குனர் நரேந்திரா என்னை சந்தித்தபோது தமிழ்நாட்டின் இந்த வங்கி 854 கிளைகளுடன் இணைந்த பணியை மேற்கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டார். நரேந்திராவுக்கும் அவரது குழுவினருக்கும் ஒரு சவாலாக தமிழ்நாட்டில் ஆயிரமாவது கிளையை தொடங்க வேண்டும் என்று நான் கோரினேன்.  இவ்வளவு பெரிய அளவில் அவர்கள் செயல்படுவார்கள் என்று நான் எதிர் பார்க்கவில்லை. அதாவது, குறைந்த காலமான 6 மாதத்திலேயே அவர்கள் தமிழ்நாட்டில் 150 கிளைகளை தொடங்கிவிட்டார்கள். இந்த சிறப்பான சாதனைக்காக நரேந்திராவையும் அவரது குழுவினரையும் நான் மனப்பூர்வமாக பாராட்டுகிறேன். 

உள்நாட்டு வங்கி முறையில் தமிழர்களுக்கு என்று ஒரு தனித்த மரபு உள்ளது. கடன் அளித்தல், வட்டி விகிதத்தை நிர்ணயத்தல் மற்றும் சரியான கட்டண செலுத்தும் முறை ஆகிய வங்கி பணிகளை தமிழ்நாட்டின் பழம்பெரும் வணிக சமுதாயம் நல்ல முறையில் அறிந்திருந்தது. வரலாற்றின் மிக முக்கியமான கட்டத்தில் இந்தியன் ஓவர்ஸ் சீஸ் வங்கி 1937-ம் ஆண்டு பழம் பெரும் மரபுகளின் அடிப்படையில் உருவானது. 1930 ஆம் ஆண்டுகளில் வறட்சியின் காரணமாக முக்கிய தானியங்களில் விலை பிரச்சனை உருவானது.  அந்த நேரத்தில் இந்தியாவின் ஏற்றுமதி மிகவும் வீழ்ச்சியடைந்தது.  நாட்டின் பராமரிப்பு உறுதி தன்மை, ரூபாய் நோட்டு மற்றும் கடன் வழங்கும் முறையை பாதுகாக்கவும், 1935 ஏப்ரலில் இந்திய ரிசர்வ் வங்கி துவக்கப்பட்டது. நிறுவன ரீதியான வங்கி முறையில் இந்த சகாப்தத்தில் இந்தியன் ஓவர்ஸ் சீஸ் வங்கி முதல் மிகவும் பெரும் வங்கியாக நிர்வாகத்தை பெற்றுள்ளது. எம்.சிதம்பரம் செட்டியார் 30 வயதாக இருந்தபோது இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுத்தார். இதனை நாம் மிகவும் பெருமையுடனும், நன்றியுடனும் நினைத்துப் பார்க்க வேண்டும். அவரால் தொடங்கப்பட்ட சிறிய வங்கி, மிகப்பெரிய உலகளாவிய அமைப்பாகவும், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் லட்சக்கணக்கான மக்களுக்கு சேவை செய்து முன்னோடி வங்கியாக திகழ்கிறது. 

இந்தியன் ஓவர்ஸ் சீஸ் வங்கி எனக்கு புதியது அல்ல. அது தேசியமயம் ஆக்கப்பட்டதற்கு. முன்னும் பின்னும் இருந்து அதனை பார்த்து வருகிறேன். இந்த வங்கியின் வாடிக்கையாளர்களின் நானும் ஒருவர். மிகப்பெரிய சேவை இணைப்புக்காகவும், 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கிளைகளைக் கொண்டு பொறுப்புடன் நடந்து வருவதால் தமிழகத்தில் அது முக்கிய இடத்தை பெற்று வருகிறது.  ஓரத்தில் உள்ள கிராமங்கள், மகளிர் குழுக்கள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் ஆதிவாசி மக்கள் தொகை உட்பட மாநிலத்தில் முன்னணி நடவடிக்கைகளை இந்த வங்கி எடுத்த வருகிறது என்பதிலும் நான் மகிழ்ச்சியடைகிறேன். நீலகிரி ஆதிவாசி மக்களுக்காக இந்த வங்கி நிதி அடிப்படையில் எடுத்த முன் முயற்சிகளுக்காக இரண்டு தேசிய விருதுகளைப் பெற்று உள்ளது.  2008-ல் உலகளாவிய பொருளாதார சிக்கலினால் மிகப்பெரிய தடுமாற்றம் ஏற்பட்டபோது, சில்லறை வங்கியியல் திட்டம் என்ற வாய்ப்பை பயன்படுத்தி இந்த வங்கி மீண்டும் தன்னை உருவாக்கியுள்ளது. இந்தியன் ஓவர்ஸ் சீஸ் வங்கியை போல, உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்பான நிறுவனங்களின் தமிழ்நாட்டில் நிதிமுறையை உண்மையில் மிகப்பெரிய அளவில் விரிவுப்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. நிதி என்பது பொருளாதாரத்தின் உயிர் தரும் இரத்தம் போன்றது. தன்னிறைவுக்கும் முக்கியமானது, பொருளாதார வளர்ச்சியை உள்ளடக்கியது. சேமிப்பு, வைப்புத் தொகை, தொகை செலுத்தும் சேவைகள் மற்றும் கடன் போன்ற நிதி சேவைகளில் மிகப்பெரிய எண்ணிகையிலான குடும்பங்கள் இணைவதை அதிகரிக்கும் வகையில் வங்கி பணிகள் உள்ளன. மேலும் மேலும் அதிக மக்களுக்கு நிதித் தேவைகள் அதிகமாக உள்ளது.  மின்சாரம், குடிநீர் வழங்கல் மற்றும் தொலைபேசி போல பொது மக்கள் சேவையில் வங்கி பணியும் மிக முக்கியமாக வளர்ந்து வருகிறது. 

பொருளாதார மேம்பாட்டை பொருத்தவரையில் சேமிப்பு என்பது மிகவும் முக்கியமானது.  வங்கிகளும், நிதி நிறுவனங்களும் சேமிப்பை உற்பத்தி துறையில் முதலீடு செய்கின்றன. உற்பத்தி இல்லாத துறைகளில் முதலீடு செய்வது இல்லை. தற்போது இந்தியாவில் குடும்பங்களின் சேமிப்பில் 50 சதவிதம் நிதி சொத்துக்களுக்காகவும், மற்றவை நிலையான சொத்துகளுக்காகவும் முதலீடு செய்யப்படுகிறது.  மேலும் இந்த சேமிப்புகளில் வணிக வங்கிகளில் 42 சதவிகிதமும், வங்கி சேமிப்புகளில் 61.2 சதவிதமும் செலுத்தப்படுகின்றன. 2010-11 ஆம்  ஆண்டு ரிசர்வ் வங்கி புள்ளி விவரம் இதைத் தெரிவிக்கிறது. நிதி சேமிப்புகளில் பங்கு பெறுவதிலும், வணிக வங்கிகள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்பதை இது காட்டுகிறது.  உலகிலுள்ள  2.5 மில்லியன் வங்கி கணக்கு வைத்தில்லாத மக்கள் தொகையின் 6-ல் ஒரு பங்கினர் இந்தியாவை சேர்ந்தவர்கள். 

இந்தியாவின் மாநிலங்களை ஒப்பிடும்போது நிதி குறியீட்டில் தமிழகம் 7-ம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் தமிழ்நாடு முதன்மையானதாக வளர வேண்டும் என்ற எனது கனவுகள் அடிப்படையில்  நிதி துறையிலும் தமிழகம் முதலாவது இடத்தை பெற வங்கிகள் அனைத்தும் தன்னுடைய நடவடிக்கைகளை இரட்டிப்பாக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தொலைபேசி மூலம் வங்கியில் பதிவு செய்தல் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் போன்றவை வளர்ந்தும் வரும் நேரத்தில் தொழில்நுட்ப அடிப்படையில் வங்கி பணிகளை விரிவுப்படுத்த வேண்டி உள்ளது. வங்கிகள்  தொழில்நுட்பத்தை வளர்த்து அதில் அதிக மக்களிடம் தொடர்பு கொள்ள வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். 

அரசின் வரிகளையும் நீண்டகாலமாக வசூலித்து வருகின்றன. தற்போது சம்பளங்களையும் வங்கிகளின் மூலமாக அரசு அளித்து வருகிறது.  சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களையும் வங்கிகளின் மூலமாகவே விநியோக்கிறோம். இந்த நடவடிக்கை இப்போது ஆரம்பித்துள்ளது. இதை அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டமும் வங்கிகளின் மூலமே நடைபெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தமிழ்நாட்டில் மிகப்பெரிய தொகுப்பான ஓய்வூதியம், கூலி, கல்வி உதவி தொகைகள் ஆகியவை மிகப்பெரிய வங்கி வணிகத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கிகளும், அரசும் தன்னுடைய உறவில் பங்கெடுத்து கொள்கின்றன.

என்னுடைய 2012-13 ஆம் ஆண்டு பட்ஜெட் உரையில் ஒருங்கிணைந்த நிதிமுறை மற்றும் மனிதவள ஆதார பராமரிப்பு முறை திட்டத்தை நான் அறிவித்தேன்.  இந்த அடிப்படையில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை வங்கிகள் முழுமையாக கையாள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கிராமப்புறங்களில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி வரும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மிகப்பெரும் அஸ்திவாரத்தை அமைத்துள்ளன. வறுமையை ஒழிப்பதில் இத்தகைய பணிகளை சிறப்பாக வங்கிகள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

2012-13-ம் ஆண்டில் பட்ஜெட் உரையில் தமிழ்நாடு நகர்ப்புற ஆதாரத்திட்டதை அறிவித்தேன். வங்கிகளின் ஒத்துழைப்புடன் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விவசாயத்துறையை பொறுத்தவரையில் முன்னுரிமை அளித்து வருகிறது. இத்துறைக்கு கடன் வழங்குவதில் வங்கிகள் முன்வரவேண்டும். இதற்கான குறியீட்டு தொகை 48,584 கோடியாகும். இவற்றின் தவணை முறைக்கடன் 17,010 கோடியாகும். 

2011-12-ல் இதற்கான குறியீடு 31,017 கோடியாகும். இதில் தவணைமுறைக்கடன் 7,518 கோடியாகும்.  இந்த குறியீடு மிஞ்சப்பட்டுள்ளது என்று நான் அறிகிறேன். 

தமிழ்நாடு பொருளாதாரம் மற்றும் சமுகம் மேம்பாட்டின் சகாப்பதத்தில் முக்கிய கட்டத்தில் உள்ளது. என்னுடைய தமிழ்நாடு 2023 தொலைநோக்கு திட்டம் வளமான தமிழ்நாட்டை உருவாக்க என்னுடைய தொலைநோக்கு பார்வையில் அடிப்படையாகக் கொண்டதாகும். அடுத்த 11 ஆண்டுகளில் இதற்கு 15 லட்சம் கோடி தேவைப்படும். 2023 தொலைநோக்கு திட்டத்தை நிறைவேற்ற இந்திய ஓவர்ஸ் சீஸ் வங்கி முதலாவதாக முன்வந்ததற்காக நான் பாராட்டுகிறேன்.

இந்திய ஓவர்ஸ் சீஸ் வங்கி தன்னுடைய சவால்களை நிறைவேற்றும் என்று நான் நம்புகிறேன். தன்னுடைய பணிகளை தொடர்ந்து நிறைவேற்றும். மேலும் மாநிலத்திலுள்ள ஒவ்வொரு வங்கி இணைப்பை பெற்று இந்தியாவிலேயே நிதி துறையில் தமிழகத்தை முதன்மையான மாநிலமாக்க மற்ற வங்கிகளை இந்திய ஓவர்ஸ் சீஸ் வங்கியின் பணிகள் ஊக்கப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.

இந்தியன் ஓவர்ஸ் சீஸ் வங்கி வருங்காலத்தில் சிறந்த முறையில் வளர வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

இவ்விழாவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமை நிர்வாக இயக்குனர், வங்கியின் தலைமை அதிகாரிகள், தமிழக அமைச்சர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago