முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் சங்க தலைவராக சரத்குமார் போட்டியின்றி தேர்வு

வெள்ளிக்கிழமை, 1 ஜூன் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூன்.1 - நடிகர் சங்க தலைவராக சரத்குமாரும், பொதுச்செயலாளராக ராதாரவியும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி பிறைசூடன் அறிவித்து இருக்கிறார். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 23ஆம் தேதி தொடங்கி, 25ஆம் தேதி வரை நடந்தது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு ஆர்.சரத்குமார் ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவி ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். துணைத்தலைவர்கள் பதவிக்கு கே.என்.காளை, ஆர்.விஜயகுமார் ஆகிய இருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 25 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், என்.டி.ராஜ் இந்திர பிரவீன் தாக்கல் செய்த வேட்பு மனுவை கடிதம் மூலம் வாபஸ் பெற்றுக்கொண்டார்.

எனவே வேட்பு மனு தாக்கல் செய்த தகுதியுள்ள வேட்பாளர்களை எதிர்த்து யாரும் போட்டியிடாத காரணத்தால் ஆர்.சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர்,கே.என்.காளை, ஆர்.விஜயகுமார் ஆகியேர் பேட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் பற்றி தேர்தல் அதிகாரி பிறைசூடன் தெரிவித்துள்ளார்.

மேலும் செயற்குழு உறுப்பினர்களாக டி.ஆர்.சிலம்பரசன், ஸ்ரீகாந்த், சார்லி, சின்னி ஜெயந்த், டெல்லி கணேஷ், கே.ஆர்.செல்வராஜ், குண்டு கல்யாணம், சந்தான பாரதி, பாத்திமாபாபு, குயிலி, நளினி, ஏ.சகுந்தலா, பசி சத்யா, சத்யப்ரியா உள்பட 24 பேர் செயற்குழு உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!