முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இல்லற வாழ்வு இனிமையாக இருக்க விட்டுக்கொடுக்க வேண்டும்

செவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.- 19 - இல்லற வாழ்வு இனிமையாக இருக்க வேண்டும் என்றால் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதத்தில் முதல்வர் ஜெயலலிதா ஆட்டுக்குட்டிக் கதையைக் கூறி நேற்றய திருமண விழாவை கலகலப்பாக்கினார். சென்னையில் நேற்று 1006 திருமணங்களை முன்னின்று நடத்திய முதல்வர் ஜெயலலிதா திருமண விழாவில் மணமக்களுக்கு அறிவுரை கூறினார். இந்த இல்லற வாழ்வு இனிமையாக இருக்க வேண்டுமென்றால், சலனமில்லாத, விசாலமான மனம் வேண்டும். பொறுமை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வேண்டும். இன்றைக்கு பல குடும்பங்களில் அர்த்தமில்லாத சண்டைகள் தான் அதிகம். அவ்வாறு சண்டை போடுபவர்கள் அடுத்தவரின் எண்ணத்திலிருந்து சிந்தித்துப் பார்த்தால், சச்சரவுக்கே இடமில்லாது போய்விடும். ஓர் ஊரில் வேலைவெட்டி இல்லாமல் ஒருவன் இருந்தான். அவனுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். மனைவியும் வந்து சேர்ந்தாள். ஒரு நாள் மனைவி, தனது கணவனைப் பார்த்து, சும்மாவே உட்கார்ந்து கொண்டு இருக்கிறீர்களே? சம்பாதிக்கிற வழியைப் பாருங்கள் என்றாள். உடனே கணவன், அது பற்றி தான் சிந்தித்து கொண்டிருந்தேன். ஒரு அருமையான திட்டம் எனது மனதில் உதித்துவிட்டது என்று கூறினான். என்ன திட்டம்? என்று ஆவலோடு வினவினாள் அவனது மனைவி. ஓர் ஆட்டுக்குட்டி வாங்கப் போகிறேன் என்றான் கணவன். சரி என்றாள் மனைவி.  அதற்கான பணத்தை null தான் உன் அப்பாவிடம் கடனாக வாங்கித் தர வேண்டும்.  நான் மானஸ்தன்.  எனக்கு ஒன்றும் இனாமாக வேண்டாம்.  கடன் கொடுத்தால் போதும் என்றான். இந்தக் கதை நடந்த காலத்தில் உங்கள் அன்புச் சகோதரியின் அரசு இல்லை.  இருந்திருந்தால், அவர்களுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 4 ஆடுகள் கிடைத்திருக்கும். ஆட்டுக்குட்டியை வாங்கி என்ன செய்யப் போகிறீர்கள்? என்றாள் மனைவி. அதற்கு கணவன், அந்தக் குட்டி வளரும்.  பிறகு நிறைய குட்டிகள் போடும் என்றான். பிறகு என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேட்டாள் மனைவி. அதையெல்லாம் சந்தையிலே கொண்டு போய் விற்றுவிட்டு, அந்தக் காசுக்கு ஒரு பசு மாடு வாங்குவேன் என்றான் கணவன். அது எதற்கு? என்று கேட்டாள் மனைவி. பசு மாடு நிறைய பால் கொடுக்கும்.  அதைக் கொண்டு போய் பால் பண்ணையிலே கொடுத்தால் நிறைய காசு கிடைக்கும்.  பாலையும் விற்கலாம், நாமும் காபி சாப்பிடலாம்; உடல் நலம் இல்லாத எனது தந்தைக்கு குடிக்க பால் கொடுக்கலாம் என்றான் கணவன். உடனே மனைவி, அடுத்த தெருவில் இருக்கும் எங்க அம்மா வீட்டிற்கும் கொஞ்சம் பால் கொடுத்தனுப்பலாம் என்றாள். உடனே, கணவனுக்கு கோபம் வந்துவிட்டது.  அது எப்படி? உங்க அம்மா வீட்டுக்கு எதற்காக கொடுக்கணும்?  அதெல்லாம் முடியாது. என்றான்.  இந்த இடத்தில் சண்டை ஆரம்பமாகிவிட்டது. இரண்டு பேரும் சத்தம் போட ஆரம்பித்து விட்டார்கள். கடுமையாக சண்டை நடப்பதை அறிந்து, பக்கத்து வீட்டுக்காரன் ஓடி வந்தான்.  இவர்கள் இருவரும் வாங்காத மாட்டிற்காக சண்டை போட்டுக் கொள்கிறார்கள் என்பது அவனுக்குத் தெரியும். 

இருப்பினும், சண்டை போட்டுக் கொண்டிருக்கும் கணவன் ​ மனைவியைப் பார்த்து, உன் மாடு என் தோட்டத்தில் மேய்ந்து பயிரை எல்லாம் நாசப்படுத்திவிட்டது.  பத்தாயிரம் ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.  null நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். என்று கூறினான். இதைக் கேட்டு அரண்டு போன கணவன், பக்கத்து வீட்டுக்காரனைப் பார்த்து, நான் இன்னும் மாடே வாங்கவில்லை.  உனக்கு தோட்டமே இல்லை. மாடு எப்படி உன் தோட்டத்தில் மேயும்? என்ன உளர்றே? என்று கேட்டான். உடனே பக்கத்து வீட்டுக்காரன், null தான் உளறுகிறாய்.  மாடே வாங்காமல் எப்படி உன் மனைவி அவங்க அம்மா வீட்டுக்கு பால் கொடுத்தனுப்ப முடியுமோ; அதே போலத்தான் அந்த மாடு இல்லாத என் தோட்டத்திலும் மேய்ந்தது என்றான். அப்போதுதான் கணவனுக்கு புத்தி வந்தது.  அர்த்தமே இல்லாமல் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறோமே, என்பதை உணர்ந்தான். இல்லாத விஷயத்திற்கு சண்டை போட்டுக் கொண்டு, இல்லறத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிற மனிதர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதைத் தான் இக்கதை நமக்கு உணர்த்துகிறது.  இந்தக் கதையிலிருந்து உணர்ந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், கணவனும், மனைவியும் அன்பாக இருக்க வேண்டும்; ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும்; விட்டுக் கொடுக்கிற மனப்பான்மை வேண்டும் என்பது தான்.  இது தான் நல்ல குடும்பத்திற்கு அழகு.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!