முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு எதிரான அரை இறுதியில் தோல்வி ஏன் ? அப்ரிடி

வெள்ளிக்கிழமை, 1 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

மொகாலி, ஏப். 1 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மொகாலியில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான 2 -வது அரை இறுதியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்து அந்த அணியின் கேப்ட னான சாகித் அப்ரிடி விளக்கம் அளித்து இருக்கிறார். 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியைப் பொறுத்தவரை பாகிஸ் தான் அணி இந்தியாவிற்கு எதிராக ஒரு முறை கூட வெற்றி பெற்றது கிடையாது. அந்த சென்டிமென்ட் இந்த உலகக் கோப்பையிலும் தொ டர்கிறது. 

அந்த அணி ஏற்கனவே 4 முறை தோல்வி அடைந்து இருந்தது. இந் த நிலையில், மொகாலியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளு க்கு இடையே 2 -வது அரை இறுதிப் போட்டி நடந்தது. இதில் பரபரப் பான ஆட்டத்தில் இந்திய அணி 29 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

5 -வது முறையாக அந்த அணி இந்தியாவிடம் தோல்வி அடைந்துள்ள து. இது குறித்து பாகிஸ்தான் அணிக் கேப்டன் அப்ரிடி நிருபர்களிடம் தெரிவித்ததாவது - கேட்ச்சுகளை தவற விட்டதே முக்கிய காரணம். 

இந்தப் போட்டியில் எங்களை விட இந்திய அணி சிறப்பாக ஆடியது. அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற எனது வாழ்த்துக்க ளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்தியாவுக்கு எதிரான அரை இறுதியின் போது, எங்களது அணியில் எந்த ஒரு ஜோடியும் நிலைத்து நின்று ஆடவில்லை. எங்களது விக்கெ ட்டுகள் சிறிது இடைவெளியில் விழுந்த வண்ணம் இருந்தன. 

எங்களது அணியில் உள்ள இளம் வேகப் பந்து வீச்சாளரான வகாப் ரியாஸ் மிகவும் சிறப்பாக பந்து வீசினார். ஆனால் அனுபவம் வாய்ந்த வீரரான உமர் குல் பந்து வீச்சு சரியாக எடுபடவில்லை. எந்த ஒரு நபருக்கும் மோசமான நாள் அமையலாம். 

இந்தியாவுடன் மோதும் அரை இறுதிப் போட்டியை அனைவரும் எதிர்பார்த்தார்கள். இந்தத் தோல்விக்காக நாட்டு மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அப்ரிடி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்