முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரணாப் முகர்ஜிக்கு எதிரான ஆட்சேபணையை நிராகரித்தற்கான ஆதாரத்தை கேட்கிறார் சங்மா

வியாழக்கிழமை, 5 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி. ஜூலை. - 5 - பிரணாப் முகர்ஜிக்கு  எதிராக தான் எழுப்பிய ஆட்சேபணையை தேர்தல் அதிகாரி நிராகரித்தற்கான ஆதார ஆணையின் நகலை வெளியிடுமாறு பி.ஏ. சங்மா கோரியுள்ளார். வருகிற 19 ம் தேதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் பி.ஏ. சங்மா போட்டியிடுகிறார். இவர்கள் இருவரும் கடந்த மாதம் 28 ம் தேதி  தங்களது வேட்பு மனுக்களை தாக்கல்  செய்தனர். பிரணாப் முகர்ஜி ஆதாயம் தரும் ஒரு பதவியில்  தொடர்ந்து நீடிப்பதால் அவரது  வேட்பு மனுவை ரத்து செய்யுமாறு பி.ஏ. சங்மா கோரிக்கை விடுத்தார். ஆனால் இவர்கள் இருவரது வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி தேர்தல் அதிகாரியும் ராஜ்ய சபை செயலாளருமான வி.கே. அக்னி ஹோத்திரி அறிவித்திருந்தார். பிரணாப் முகர்ஜிக்கு எதிராக  தான் எழுப்பிய ஆட்சேபணையை நிராகரித்தற்கான ஆதார ஆணை நகலை வெளியிடுமாறு தேர்தல் அதிகாரிக்கு பி.ஏ. சங்மா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது  தொடர்பாக தேர்தல் அதிகாரி அக்னி ஹோத்திரிக்கு சங்மா ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். தான் ( சங்மா ) எழுப்பிய ஆட்சேபணையை நிராகரித்ததற்கான ஆணை நகலை வெளியிடுமாறு அவர்  அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். ஆட்சேபணையை நிராகரித்த விரிவான ஆணை நகலை வெளியிட வேண்டும் என்றும்  அவர் கோரியுள்ளார். இந்திய புள்ளியியல் நிலையத்தின்   பதவியிலுந்து  பிரணாப் முகர்ஜி ராஜினாமா செய்துள்ளளாரா? என்பதை அறிந்து கொள்வதற்காகவே  தான இந்த விவரத்தை கேட்பதாகவும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த  நிலையில் பிரணாப்பிற்கு எதிரான ஆட்சேபணையை  நிராகரித்தற்கான விரிவான ஆணை நகலை தேர்தல் அதிகாரி வெளியிட வேண்டும் என்றும் இல்லையேல் ஜனாதிபதி தேர்தலுக்கு எதிராக வழக்கு  தொடரப்படும் என்றும் நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க. எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பா.ஜ.க. மூத்த  தலைவர் எஸ்.எஸ். அலுவாலியா கூறுகையில் -  பிரணாப் விஷயத்தில் நடந்துள்ள நிகழ்வு இது வரை நடக்காத ஒரு நிகழ்வாக உள்ளது என்றார். தேர்தல் அதிகாரியிடமிருந்து ஆணை நகல் பெற்ற பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு  செய்யப்படும் என்றும் அலுவாலியா கூறினார். இதனிடையே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக லோக் சபை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் வீட்டில் பி.ஏ. சங்மா சுமார் 2 மணி நேரம் முக்கிய தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். சரியான விளக்கம் கிடைக்கவில்லை என்றால் ஜனாதிபதி  தேர்தலை எதிர்த்து வழக்கு  தொடரப்படும் என்று  சங்மாவின் வழக்கறிஞரும் பா.ஜ.க.வின் சட்ட குழு  தலைவருமான சத்ய பால் ஜெயின் செய்தியாளர்களிடம்  தெரிவித்தார். எல்லா வாய்ப்புகளும் திறந்தே உள்ளன. ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு அநத தேர்தலை எதிர்த்து வழக்கு தொடருவோம் என்று சத்ய பால் ஜெயின் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்