முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குச்சனூர் சனீஸ்வர பகவான்கோவில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2012      ஆன்மிகம்
Image Unavailable

தேனி,ஜூலை.- 22 - குச்சனூர் சனீஸ்வரபகவான் கோவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.பக்தர்களின் வசதிக்காக தற்காலிகமாக  பேருந்து பஸ்நிலையங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு பேருந்துகள்  இயக்கப்பட்டன. தேனி மாவட்டம் ,சின்னமனூர் அருகே குச்சனூரில் சனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் ஒவ்வொரு  ஆடி மாதமும்  கொடியேற்றத்துடன் திருவிழா நடைபெறுவது வழக்கம்.இத்திருவிழா தொடர்ந்து 5 வாரங்கள் நடைபெறும்.இத்திருவிழாவின் போது தமிழகம் மட்டும் மல்லாது அனைத்து பகுதிகளிலும் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு தனது நேர்த்திகடனை செலுத்து விட்டு செல்வார்கள்.அதே போல் இந்த வருடமும் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.கோவிலின் வளாகத்தில் பக்தர்களின்  கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சுரபி நதியில் நீராடி சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் கோவிலின் தெற்குபகுதி வழியாக வெளியேறும் வகையில் தற்காலிகமாக பாதை அமைக்கப்பட்டுள்ளது.வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக தேனி,போடி,சின்னமனூர்,கம்பம்,உத்தமபாளையம்,பெரியகுளம் ஆகிய ஊர்களில் இருந்து குச்சனூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.சின்னமனூர்,உத்தமபாளையம்,வீரபாண்டி காவல்நிலையத்தில் உள்ள போலீசாரும்,வீரபாண்டி தீயணைப்புதுறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.விழா ஏற்பாடுகளை தக்கார் சுரேஷ்,செயல் அலுவலர் ராஜேந்திரகுமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்