முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்மேற்கு ராணுவ கமாண்ட் பகுதிக்கு தலைமை தளபதி பிக்ராம்சிங் பயணம்

புதன்கிழமை, 1 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

ஜெய்பூர்,ஆக.- 1 - தென்மேற்கு ராணுவ கமாண்ட் பகுதிக்கு தலைமை தளபதி பிக்ராம் சிங் இரண்டு நாள் பயணமாக சென்றுள்ளார்.  இந்திய ராணுவம் பல கமாண்ட்களாக பிரிக்கப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கு மேற்கு தெற்கு, தென்மேற்கு, வடகிழக்கு ராணுவ கமாண்ட்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றுக்கும் தலைமை கமாண்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் ராணுவ தளவாடங்கள் குறைவாக இருக்கிறது என்ற புகார் எழுந்துள்ள நிலையில் வெளிநாடுகளில் இருந்து ராணுவ ஆயுதங்களை வாங்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில் பாகிஸ்தானையொட்டியுள்ள தென்மேற்கு ராணுவ கமாண்ட் பகுதிக்கு தலைமை தளபதி பிக்ராம் சிங் இரண்டு நாட்கள் பயணமாக சென்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தென்கமாண்ட் பகுதியில் எந்த சூழ்நிலையிலும் சமாளித்து எதையும் சந்திக்கும் நிலை இருக்கிறதா என்பதை பிக்ராம் ராம் சிங் ஆய்வு செய்தார் என்று ராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். ராணுவ அதிகாரிகளுடன் பிக்ராம் சிங் கலந்துரை நடத்தினார். அப்போது ராணுவம் எதிர்நோக்கியுள்ள சவால்கள் அதை எதிர்கொண்டு வெற்றிபெற தேவையான கூட்டு நடவடிக்கை குறித்தும் பிக்ராம் சிங் விவாதித்தார். எதையும் சந்திக்கும் வகையில் தயாராக ராணுவம் தயாராக இருக்க வேண்டும் என்றும் உயரதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார். முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் மற்றும் போரில் வீரமரணம் அடைந்த ராணுவத்தினர் குடும்பங்களுக்கு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் குறித்தும் முன்னாள் ராணுவ வீரர்களிடம் பிக்ராம் சிங் விளக்கினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்