முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா கோலாகலம்

வியாழக்கிழமை, 2 ஆகஸ்ட் 2012      ஆன்மிகம்
Image Unavailable

சங்கரன்கோவில் ஆக. - 2 - திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி கோவிலில்  ஆடித்தபசு திருவிழா நேற்று நடைபெற்றது. இதனையொட்டி பக்தர்கள் குவிந்;;தனர்;.    தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி திருக்கோவில் ஒன்றாகும்.இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமான திருவிழா ஆடித்தபசு திருவிழா.தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற, இந்த திருவிழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவன் வேறு, வி';ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை உலகிற்கு உணர்த்தும் பொருட்டு அன்னை கோமதியின் தவத்திற்கு இணங்க சிவபெருமான் சங்கர நாராயணராக காட்சி தருகிறார்.இச்சிறப்பு மிக்க திருவிழா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயத்தின் சார்பில் மண்டகப்படியுடன்  நடைபெற்றது. காலையும் மாலையும் கோமதி அம்பாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வெவ்வேறு திருக்கோலத்தில் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் மாலையில்;;;; திருக்கோவில் கலையரங்கத்தில் சிறப்பு சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று  ஆடித்தபசு காட்சி நடைபெற்றது இதையொட்டி காலையில் சுவாமி அம்பாளுக்கு  கும்பம் அபி'ேகம், திருக்கண், தபசுமண்டபத்தில் சிறுபருப்பு நைவேத்தியமும,; விளா புஜையில் மூலஸ்தானம் ஸ்ரீசுவாமி அம்பாளுக்கு அபிசேகம் நடைபெற்றது.  காலை 8.30 மணிக்கு பட்டு பரிவட்டம் கட்டி, கோமதி அம்பாளுக்கு மண்டகப்படி அழைப்புச்சுருள் திருக்கண் நடைபெற்றது. பின்னர் 11.45 மணிக்கு தங்கசப்பரத்தில் அம்பாள் தபசு மண்டபத்திற்கு எழந்தருளும் நிகழ்சியும் நடைபெற்றது. மாலை சரியாக 6.45 மணிக்கு சங்கரநாராயணராக ரி'ப வாகனத்தில் எழந்தருளி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் தபசுகாட்சி நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.    இவ் விழாவிற்கான ஏற்பாட்டை  திருக்கோவில் இணை ஆணையர் அன்புமணி உத்தரவுபடி கண்காணிப்பாளர் சுப்புலட்சுமி மற்றும் திருக்கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர். ஆடித்தபசு திருவிழா நிகழ்ச்சிகளில் நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் செல்வராஜ், சங்கரன்கோவில் எம்எல்ஏ முத்துசெல்வி, நீதிபதிகள் சாருஹாசினி, பாலசுப்பிரமணியன், முரளிதரகண்ணன், சேரன்மகாதேவி உதவி கலெக்டர் ரோஹினி ராம்தாஸ், சங்கரன்கோவில் தாசில்தார் தாமோதரன், நகராட்சி ஆணையாளர் இசக்கியப்பன், நகராட்சி தலைவர் கண்ணன், சங்கரன்கோவில் யுனிையன் தலைவர் அன்னலட்சுமி காளிச்சாமி, குருவிகுளம் யுனிையன் தலைவர் ராமலட்சுமி பாண்டியராஜ், முன்னாள் எம்எல்ஏக்கள் சங்கரலிங்கம், கோபாலகிரு';ணன்,  மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் ஜெய்சங்கர், தொகுதி இணை செயலாளர் வேல்ச்சாமி, அதிமுக பிரமுகர் ராமநாதன், மாவட்ட அம்மா பேரவை துணை தலைவர் குமாரவேல், எம்ஜிஆர் மன்ற பொறுப்பாளர்கள் ஆறுமுகம், அந்தோணி, இளைஞர் பாசறை மாவட்ட பொறுப்பாளர் திலிப்குமார், மாவட்ட தொழிற்சங்க இணை செயலாளர் கந்தவேல், மாநில பேச்சாளர்கள் கணபதி, ராமசுப்பிரமணியன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் எஸ்கே.கருப்பசாமி, கவுன்சிலர்கள் உமாவதி சந்திரசேகர் , முப்பிடாதி, ஜெயலட்சுமி, உமா மகேஸ்வரன், ராமலட்சுமி, வெள்ளி முருகன், ஆப்பரேட்டர் மணி, சோடா குழந்தைவேல், மாவட்ட மதிமுக இலக்கிய அணி துணை செயலாளர் நடுவை முருகன், வேல்;ப்பாண்டியன், டாக்டர் சுப்புராஜ், தேமுதிக சார்பில் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் திவ்யா ரெங்கன், முன்னாள் நகர செயலாளர் மணிகண்டன், ஒன்றிய செயலாளர் கருப்பசாமி, நகர பொருப்பாளர்கள் சாரதா சிதம்பரம், ரத்தினகுமார், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட தொழிற்சங்க செயலாளர் முப்பிடாதி, நகைக்கடை அதிபர்கள் செல்வம், சங்கரசுப்பிரமணியன், ராமகிரு';ணன், குமரன், கண்ணன், பிச்சையா,முருகன், பரமசிவம், சண்முகம்,  உள்ளிட்ட லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து அருள் பெற்றனர்.     திருவாவடுதுறை ஆதின மடம் மற்றும் தெற்குரதவீதியில் உள்ள ஜின்னிங் பாக்டரியில் ஆடித்தவசு காண வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்திருந்தனர். மேலும் நகரின் பல பகுதிகளிலும் அன்னதானம் வழங்கப்பட்டதால் பக்தர்கள் சிரமம் இல்லாமல் கோமதி அம்மனை தரிசனம்; செய்து பசியாறி சென்றனர். கடும் வெயில் நிலவியதால் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஏராளமான தண்ணீர்; வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. மேலும் சாலையில் வெயிலை தணிக்கும் பொருட்ட வண்டிகள் மூலம் நீர் தெளிக்கப்பட்டது. திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை நெல்லை சரக டிஜஜி வரதராஜன் உத்தரவுபடி  எஸ்.பி. விஜேந்திர பிதரி ஆலோசனைப்படி சங்கரன்கோவில்; டி.எஸ்.பி. கலிபுல்லா  தலைமையில் 700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பனியில் ்டுபட்டிருந்தனர்;;. போக்குவரத்து பணிகளை மக்களை பாதிக்காத வகையில் போக்குவரத்து பிரிவினர் சிறப்பாக செய்திருந்தனர். சுகாதார பணிகளை சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் கண்ணன், ஆணையாளர்; இசக்கியப்பன்  உத்தரவுப்படி சுகாதார அலுவலர் குருசாமி மற்றும் நகராட்சி பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்